<p><strong>England Election 2024:</strong> இங்கிலாந்து நாடாளுமன்ற பொதுதேர்தலில், தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் வெற்றி பெற்று எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் கட்சி சார்பில், ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் பவ் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றுள்ளார். தொழிலாளர் கட்சியின் உமா குமரன் மொத்தம் 19,145 வாக்குகளை பெற்ற நிலையில், கிரீன் கட்சியைச் சேர்ந்த ஜோ ஹட்சன் 7,511 வாக்குகளையும் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார்.</p>