தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த முறை கணிசமான அளவு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 2026- 27ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கு மொத்தம் 3,02,373 மாணவ - மாணவியர் விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இதில் பதிவு செய்து பதிவுக் கட்டணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,45,220 ஆகும். இதில் பொதுப் பிரிவினர் - 2,42,909 ஆவர். அதேபோல தொழிற்கல்விக்கு 2,311 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

50 ஆயிரத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர்கள்

அதேபோல அரசு பள்ளியில் பயின்ற மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் 7.5% இடஒதுக்கீட்டு பதிவு செய்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை - 50,373.

இதில் பொதுப் பிரிவினர் - 49,774

தொழிற்கல்வி - 599

இதில் பாலின வாரியாக ஆண்களின் எண்ணிக்கை - 24,742

பெண்களின் எண்ணிக்கை - 25,628

மூன்றாம் பாலினத்தவர்- 3

ஆக மொத்தம் 50,373 அரசுப் பள்ளி மாணவ மாணவியர் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்து உள்ளனர். முன்னதாக மே 3ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், ஜூன் 5ஆம் தேதி வரை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நடந்து முடிந்தது.

இன்று வெளியாகும் ரேண்டம் எண்; தரவரிசைப் பட்டியல் எப்போது?

ரேண்டம் எண் இன்று (ஜூன் 10) வெளியாக உள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் ஜூன் 29ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கலை, அறிவியல் படிப்புகளில் சேர 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில், ஜூன் 18ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளில் அரசு இட ஒதுக்கீட்டில் சேர இந்த கலந்தாய்வில் பங்குபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.