Elephant Attack: கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே கோயில் திருவிழாவின்போது பட்டாசு வெடித்ததில் மிரண்டு போன 2 யானைகள் தாக்கியதில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயிலாண்டி, குருவன்காடு, மனகுளங்கரா கோயிலில் நடந்த கோயில் திருவிழாவின் போது இந்த கொடூர சம்பவம் நடந்தது. யானைகள் தாக்கியதில் 30 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அதில் 12 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.