Election Results 2026: 5 மாநிலங்களில் அனல்பறக்கும் வாக்கு எண்ணிக்கை! ஆர்வத்துடன் காத்திருக்கும் இந்தியா!

1 month ago 5
ARTICLE AD

அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கான புதிய அரசு யார் என்பதை தீர்மானிப்பதற்கான சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் நடந்தது.

5 மாநில வாக்கு எண்ணிக்கை:

ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ள இந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. 5 மாநிலங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன்பின்பு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ மூலமாக பதிவு செய்யப்பட உள்ளது. பதட்டமான வாக்கு எண்ணும் மையங்கள் என்று கருதப்படும் இடங்களில் கூடுதலாகவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மீது தனி கவனம்:

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ள நிலையில், அங்குள்ள 140 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கைக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு தேர்தல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளையே ஆகும். இந்த தேர்தலில் தமிழ்  திரையுலகின் பிரபல நடிகர் விஜய்யின் தவெக முதன்முறையாக அரசியல் களத்தில் களமிறங்கியிருப்பதால் இந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திமுக - அதிமுக - தவெக இடையே மிகப்பெரிய போட்டி இந்த தேர்தலில் உருவாகியிருப்பதால் தனிப்பெரும்பான்மை ஆட்சியா? கூட்டணி ஆட்சியா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

பிற்பகலுக்குள் முடிவு:

தமிழ்நாட்டைப் போல பாண்டிச்சேரியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பாண்டிச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் கோலோச்சப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் முக்கியமான மாநிலமான அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மை பெறப்போவது யார்? அங்கு மீண்டும் பாஜக ஆட்சி அமையுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டைப் போலவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள மற்றொரு மாநிலம் மேற்கு வங்கம். மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா பானர்ஜி ஆட்சி வருமா? அல்லது பாஜக முதன்முறையாக ஆட்சியைப் பிடிக்குமா? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கேள்விகளுக்கான விடை இன்று பிற்பகலுக்குள் பெரும்பாலும் தெரிய வந்துவிடும்.

TN Election Results: வாக்குகள் சமமாக வந்தால் என்ன நடக்கும்? தேர்தல் விதிகளில் ஒளிந்திருக்கும் அதிரடி உண்மை!

Read Entire Article