எம்ஜிஆர் நடித்த இதயக்கனி படத்தின் 225வது நாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட நிலையில், அப்படத்தைப் பார்த்து அவர் கண்கலங்கிய காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

பம்பரமாய் சுழலும் எடப்பாடி பழனிசாமி

2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான முன்கட்ட பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு தொகுதி வாரியாக பம்பரமாக சுழன்று மக்களிடையே தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதுவரை 180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மக்களை சந்தித்து மீண்டும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்கு சேகரித்து வருகிறார்.

அதேபோல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நலத்திட்டங்கள் செய்வோம் என்பதையும் அவர் வாக்குறுதிகளாக அளித்து வருகிறார். இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளது. கள நிலவரத்தைப் பார்க்கும்போது இந்த தேர்தல் கடும் போட்டி நிலவும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆரை பார்த்து கண் கலங்கிய இபிஎஸ்

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் நடிப்பில் 1975ம் ஆண்டு வெளியான இதயக்கனி படத்தின் 225ம் நாள் ரீ-ரிலீஸ் வெற்றி விழாவில் கலந்து கொண்டார். இந்த படத்தில் பண்டரி பாய், ராதா சலுஜா, ஆர்.எஸ்.மனோகர், தேங்காய் சீனிவாசன், எஸ்.வி.சுப்பையா, ராஜசுலோச்சனா, வெண்ணிற ஆடை நிர்மலா என பலரும் நடிக்க ஜெகநாதன் இயக்கியிருந்தார். இப்படம் இன்றளவும் எம்ஜிஆர் ரசிகர்களாலும், அதிமுக தொண்டர்களாலும் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, “உழைக்கும் மக்களே... உடன்பிறப்புகளே... புரட்சித் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்களே...! நம் உயிர்நிகர் #புரட்சித்தலைவர்_எம்ஜிஆர் அவர்கள் நடிப்பில் வெளிவந்து, சத்யா மூவீஸ் தயாரிப்பில், தமிழ்நாட்டின் Industry Hit ஆகி, இந்திய அளவிலும் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்து, சர்வதேச விருதுகளைப் பெற்ற மாபெரும் வெற்றிப் படமாம் #இதயக்கனி தற்போது Re-Release ஆகி, 225 நாட்கள் வெற்றிநடைப் போட்டு வரும் நிலையில், இன்று கழக உடன்பிறப்புகளோடு இணைந்து திரைப்படத்தைக் கண்டு மகிழ்ந்தேன்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்கம் சென்று, 1975-ல் இதயக்கனி வெளியான போது, கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கி, பலமுறை படத்தைப் பார்த்து, இளைஞனாக ரசித்து மகிழ்ந்த தருணங்களை அசைபோட்டுக்கொண்டே, #MGR எனும் மூன்றெழுத்து மந்திரத்தின் காலத்தால் அழியாத திரை ஆளுமைமிக்க நடிப்பை ரசித்தேன்.

உழைக்கும் மக்களே...
உடன்பிறப்புகளே...
புரட்சித் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்களே...!

நம் உயிர்நிகர் #புரட்சித்தலைவர்_எம்ஜிஆர் அவர்கள் நடிப்பில் வெளிவந்து,

சத்யா மூவீஸ் தயாரிப்பில்,
தமிழ்நாட்டின் Industry Hit ஆகி,
இந்திய அளவிலும் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்து, சர்வதேச… pic.twitter.com/lLH9uYWe50

— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) February 17, 2026

தலைவர் அவர்களின் படங்கள், எப்போதும் நமக்கொரு நற்பாடத்தைச் சொல்லும். அதேபோல், #இதயக்கனி சொல்லும் சமநீதிச் சமுதாயம் காண, அண்ணா வழி கண்டு நன்மை தேடுவோமாக!” என பதிவிட்டுள்ளார்.