Drone Training Camp: கை நிறைய கொட்டும் பணம்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

2 months ago 9
ARTICLE AD

'மீடியா ட்ரோன் பயிற்சி'

தமிழகத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்த பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் துறை வேலைவாய்ப்பை நடத்தி வருகிறது. இதன் காரணமாக பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. அடுத்தாக சொந்தமாக தொழில் தொடங்குபவர்களுக்காக பயிற்சிகள் வழங்கி கடனுதவி வழங்கப்படுகிறது. அந்த வகையில்  'மீடியா ட்ரோன் பயிற்சி' தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான 'மீடியா ட்ரோன் பயிற்சி' வரும் 09.02.2026 முதல் 11.02.2026 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி நோக்கம் / சிறப்பம்சங்கள்:

ட்ரோன் தொழில்நுட்பம் - அறிமுகம்

ட்ரோன் சினிமாடோகிராஃபி நுட்பங்கள்

வானிலிருந்து(Aerial Photography) புகைப்படம் அறிமுகம்

FPV சினிமாடோகிராஃபி

DGCA விதிமுறைகள் மற்றும் விமான பாதுகாப்பு

மீடியா ட்ரோன் பைலட்டுகளுக்கான தொழில் வாய்ப்புகள்:

திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு.

செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள்.

ஆவணப்பட தயாரித்தல்.

விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங்.

கார்ப்பரேட் திரைப்படங்கள்.

யூடியூப் மற்றும் சமூக ஊடக உள்ளடக்க உருவாக்கம்.

காவல் மற்றும் ராணுவ கண்காணிப்பு.

நிகழ்ச்சி செய்தி களிப்பு.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை.

ரியல் எஸ்டேட் புகைப்படம் / வீடியோ தயாரித்தல்.

தொழிற்துறை புகைப்படம்.

காடு மற்றும் விலங்கியல் புகைப்படம்.

தீ மற்றும் மீட்பு பணிகள்.

அரசுத் திட்டங்கள்.
மத்திய / மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், திருநங்கைகள், திருநம்பிகள், தொழில்முனைவோர்கள்  18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். குறைந்தபட்ச கணினி அறிவு வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.tn என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவும். கைபேசி 9360221280 / 8668100181 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு
மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை-600 032.

Read Entire Article