Driving licence: இந்திய ஓட்டுனர் உரிமைத்தை கொண்டு எந்தெந்த வெளிநாடுகளில் வாகனம் ஓட்ட முடியும் என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்திய வாகன ஓட்டுனர் உரிமம் - வெளிநாடு பயணம்

சாலையை கண்கள் உற்றுநோக்க, முகத்தில் சில்லென்ற காற்று வீச, நீங்களே காரை ஓட்டி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பயணிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால், அங்கு கார் ஓட்ட தனியார் ஓட்டுனர் உரிமம் பெற வேண்டுமா? என்பது பலரது கேள்வியாக இருக்கலாம். எனில், இந்திய ஓட்டுனர் உரிமத்தை கொண்டே, 21 நாடுகளில் நீங்கள் வாகனம் செலுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். எந்தெந்த நாடுகள் அப்படி அனுமதிக்கின்றன, அதற்கான விதிகள் மட்டும் கட்டுப்பாடுகள் என்ன? என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

21 நாடுகளின் பட்டியல்

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வடக்குப் பிரதேசம், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா தவிர, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் காலவரையின்றி இந்திய ஓட்டுனர் உரிமத்துடன் வாகனம் ஓட்ட முடியும்.

பூட்டான்

உரிமம் பெற்ற இந்திய ஓட்டுநர்கள் தங்கள் சொந்த வாகனங்களுடன் ஒரு வருடம் வரை நாட்டில் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார்கள். வாகன ஆவணங்கள் மற்றும் அவர்களின் சோதனைச் சாவடி மேலாண்மை அமைப்பில் பதிவு செய்தல், அத்துடன் NU4,500 (ரூ.4,490) செலுத்துதல் போன்ற அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஆபத்தான மலைப்பாங்கான சாலைகள் காரணமாக பூட்டானில் உள்ளூர் வழிகாட்டி அல்லது உரிமம் பெற்ற ஓட்டுநர் இல்லாமல் ஒரு காரை வாடகைக்கு எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

கனடா

கனடா தங்கள் நாட்டில் வாகனம் ஓட்ட இந்தியர்களை அனுமதிக்கிறது. நீங்கள் எந்த மாகாணத்தில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து கால அளவு இருக்கும். உதாரணமாக, ஒன்ராறியோவில், நீங்கள் மூன்று மாதங்களுக்கும் குறைவாக தங்கியிருந்தால், உங்கள் சொந்த உரிமத்தைத் தவிர வேறு எந்த ஆவணங்களும் உங்களுக்குத் தேவையில்லை. ஆனால் 3 மாதங்களை கடந்தால் சர்வதேச ஓட்டுநர் அனுமதியும் தேவைப்படும்.

ஃரான்ஸ் மற்றும் மொனாக்கோ

ஃப்ரான்ஸ் மற்றும் மொனாக்கோ நாடுகள், சட்டப்பூர்வ மொழிபெயர்ப்பு அல்லது சர்வதேச ஓட்டுநர் அனுமதியுடன் இந்திய ஓட்டுநர் உரிமத்தில் ஆறு மாதங்கள் வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கின்றன .

ஃபின்லாந்து

ஃபின்லாந்து இந்திய ஓட்டுநர் உரிமத்தில் ஒரு வருடம் வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கிறது, சட்டப்பூர்வ மொழிபெயர்ப்பு அல்லது சர்வதேச ஓட்டுநர் அனுமதி தேவைப்படும்

ஜெர்மனி

ஜெர்மனிக்குள் நுழைந்ததிலிருந்து ஆறு மாதங்கள் வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவீர்கள்.

ஹாங்காங்

ஹாங்காங் உங்கள் இந்திய உரிமத்தில் 12 மாதங்கள் வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கிறது.

ஐஸ்லாந்து

ஐஸ்லாந்து இந்திய உரிமத்தில் ஒரு வருடம் வரை வாகனம் ஓட்டும் வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது.

இத்தாலி

இந்திய வாகன ஓட்டுனர் உரிமம் இருந்தால், சட்டப்பூர்வ மொழிபெயர்ப்பு அல்லது சர்வதேச ஓட்டுநர் அனுமதிச் சீட்டுடன் இரண்டு ஆண்டுகள் வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவீர்கள்.

மலேசியா

மலேசியாவில் , உங்கள் இந்திய உரிமத்தில் மூன்று மாதங்கள் வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவீர்கள், ஆங்கிலம் அல்லது மலாய் மொழிபெயர்ப்பு கட்டாயம்.

நேபாளம்

இந்திய உரிமம் பெற்ற ஓட்டுநர்கள் நாட்டில் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு மாதத்திற்கு மட்டுமே இந்த அனுமதி கிடைக்கும் ஒரே ஒரு அனுமதிச் சீட்டைப் பெறுவதன் மூலம் உங்கள் சொந்த வாகனத்தை கூட நீங்கள் எடுத்துச் செல்லலாம் .

நியூசிலாந்து

இந்திய ஓட்டுநர் உரிமத்தில் 18 மாதங்கள் வரை வாகனம் ஓட்டலாம். அதேநேரம், எல்லா நேரங்களிலும் உரிமத்தின் மொழிபெயர்க்கப்பட்ட நகல் அல்லது சர்வதேச ஓட்டுநர் அனுமதி பத்திரத்தை வைத்திருக்குமாறு வலியுறுத்துகிறது

நார்வே

நார்வேயில் , நாடு முழுவதும் வாகனம் ஓட்ட, உங்களுக்கு அனுமதி கிடைக்கும். ஆனால், மூன்று மாதங்களுக்கு மட்டுமே அப்படி வாகனத்தை இயக்க முடியும். சில சந்தர்ப்பங்களில், உங்களுக்கு சர்வதேச ஓட்டுநர் அனுமதி தேவைப்படலாம்.

சவுதி அரேபியா

சவுதி அரேபியா உங்கள் வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தில் ஒரு வருடம் வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கிறது. இருப்பினும், சர்வதேச ஓட்டுநர் உரிமத்தையும் வைத்திருப்பது சிறந்தது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர் நகர-மாநிலத்தை 12 மாதங்கள் வரை சுற்றி வர, உங்களிடம் சர்வதேச ஓட்டுநர் அனுமதி பத்திரம் அல்லது சட்டப்பூர்வ மொழிபெயர்ப்புடன் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் தேவை .

ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டில் வெளிநாட்டு உரிமம் மூலம் ஆறு மாதங்கள் வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறது, சட்டப்பூர்வ மொழிபெயர்ப்பு ஆவணம் அல்லது சர்வதேச ஓட்டுநர் அனுமதிச் சீட்டு இருந்தால் போதும்.

ஸ்வீடன்

ஸ்வீடனில் ஒரு காரை வாடகைக்கு எடுத்து ஓட்டுவதற்கு, உங்களிடம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும். வெளிநாட்டு உரிமத்தில் ஓட்டுநர் அதிகபட்சமாக ஒரு வருடம் வரை அனுமதிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்து

இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் சுவிட்சர்லாந்து சாலைகளில் ஒரு வருடம் வரை வாகனம் ஓட்டலாம் . உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் ஆங்கில நகலை வைத்திருந்தால், நீங்கள் நாட்டில் ஒரு வாகனத்தை குத்தகைக்கு எடுக்கலாம்.

யுனைடெட் கிங்டம்

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் உள்ளிட்ட யுனைடெட் கிங்டமில், 12 மாதங்கள் வரை வாகனம் ஓட்டலாம். இருப்பினும், இந்திய ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்களின் வகுப்பை மட்டுமே நீங்கள் ஓட்ட முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அமெரிக்கா

அமெரிக்காவில் , உங்கள் இந்திய உரிமத்தில் உள்ள அதே வகை கார்களை ஒரு வருடம் வரை வாடகைக்கு எடுத்து ஓட்ட அனுமதிக்கப்படுவீர்கள்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஐக்கிய அரபு அமீரகம், தங்கள் சொந்த உரிமத்தைப் பயன்படுத்தி நாட்டில் வாகனம் ஓட்ட அனுமதித்த 50 நாடுகளில் இந்தியாவையும் ஒன்றாகச் சேர்த்துள்ளது.