டொனால்டு டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், குற்றவாளி என்றும் ஆனாலும் தண்டனை இல்லை என தீர்ப்பானது நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. இதையடுத்து அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்து டிரம்ப் விலகிய் நிலையில், அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக ஜனவரி 20 ஆம் தேதி திங்கட்கிழமை பதவியேற்கிறார். இந்நிலையில் அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் , இந்திய நேரப்படி எப்போது பதவியேற்கிறார், அவருக்கு இருந்த சிக்கல் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

டிரம்ப் அதிபராக பதவியேற்பு :

உலகளவில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட தேர்தல்களில் , கடந்த ஆண்டு நடைபெற்ற அமரிக்க அதிபர் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரீசை தோற்கடித்தார், குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப்.

இதையடுத்து, அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்கிறார்; ஜனவரி 20 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் அதே நாளில்தான் அமெரிக்காவின் துணை அதிபராக ஜே.டி.வான்ஸும் பதவியேற்கிறார்.

TN Rain: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெளுக்கப்போகுது கனமழை: மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!

சிக்கலில் இருந்து தப்பித்த டிரம்ப்:

கடந்த 2016 ஆம் ஆண்டு, ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்சுடன், பாலியல் உறவு குறித்து வெளியே சொல்லாமல் இருக்க, அவருக்கு பணம் கொடுத்ததாக டிரம்ப் மீதான குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இதையடுத்து டிரம்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், 2024 ஆம் ஆண்டு மே மாதம் குற்றவாளி எனவும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும், இந்த வழக்கு குறித்தான தண்டனையானது ஜனவரி 10 ஆம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்திற்கு நேற்று வந்த நிலையில், டிரம்ப் குற்றவாளி என்றும் மேலும், நிபந்தனையின்றி விடுவிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். இதன் மூலம் அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படுவதில் இருந்து டிரம்ப் விடுவிக்கப்பட்டார்.

US President-Elect Donald J. Trump sentenced to unconditional discharge in hush money case: Judge

(File photo) pic.twitter.com/UfNxiobfag

— ANI (@ANI) January 10, 2025

இந்த தீர்ப்பு மூலம், டிரம்ப் ,வரும் 20 ஆம் தேதி அதிபராக பதவியேற்க இருந்த சிக்கல் விலகியது. மேலும், இந்த தீர்ப்பு குறித்து டிரம்ப் தெரிவித்ததாவது, நான் ஒரு குற்றமற்றவன் என்றும், இந்த தீர்ப்பு வெறுக்கத்தக்க ஏமாற்று வேலை என்றும் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க இருந்த சிக்கல் விலகிய நிலையில், வரும் 20 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவுள்ளது உறுதியாகியுள்ளது.