DMK: பங்கைப் பிரிப்பதில் பஞ்சாயத்துதான்.. திமுக-விற்கு தலைவலி தரும் கூட்டணி கட்சிகள்!

2 months ago 9
ARTICLE AD

சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டின் ஒவ்வொரு கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஆட்சியைத் தக்கவைக்க திமுக-வும், ஆட்சியை மீண்டும் பிடிக்க அதிமுக-வும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இவர்களுடன் முதன்முறை அரசியல் களத்திற்கு வந்துள்ள தவெக-வும், முதன்முறை ஆட்சியைப் பிடிக்க நாம் தமிழரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

மிகப்பெரிய கூட்டணி:

இந்த தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி பலத்துடன் களமிறங்கியுள்ள கட்சியாக திமுக உள்ளது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதிமய்யம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி என மிகப்பெரிய கூட்டணியை திமுக அமைத்துள்ளது. இதுதவிர, திமுக கூட்டணியில் இணைய ராமதாஸ் தலைமையிலான பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

திமுக-விற்கு சவால்:

ஆளுங்கட்சியான திமுக-விற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் சவாலாக இருப்பது எதிர்க்கட்சியைக் காட்டிலும் கூட்டணி கட்சிகளே ஆகும். ஏனென்றால், தொகுதி பங்கீடு என்பது இந்த முறை திமுக-விற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சவாலாக மாறியுள்ளது.

திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியிலும் பங்கு, அதிக தொகுதி ஒதுக்கீடு என்ற அழுத்தத்தை அளித்து வருகின்றனர். தவெக-வுடன் கூட்டணி வைக்க பலரும் ஆர்வம் காட்டி வருவதை மேற்கோள் காட்டி இந்த கோரிக்கையை காங்கிரஸ் முன்வைத்து வருகிறது. இதற்காக, டெல்லியில் ராகுல்காந்தியை கனிமொழி சந்தித்து ஆட்சியில் பங்கு இல்லை, அதிக தொகுதிகள் ஒதுக்கீடு சாத்தியம் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் வந்தால் திருமா வெளியே?

மேலும், ஒவ்வொரு கட்சியினரும் கடந்த முறையைக் காட்டிலும் அதிக தொகுதிகள் கேட்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். புதியதாக கூட்டணியில் இணைந்துள்ள மக்கள் நீதிமய்யம் 2 தொகுதிகள் கேட்க ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், ராஜ்யசபா தொகுதியை கமல்ஹாசனுக்கு அளித்துவிட்டதால் 2 தொகுதிகள் என்பது மநீம-விற்கு சாத்தியமே இல்லாத ஒன்று.

தவெக-வைத் தொடங்கிய விஜய் முதன்முதலில் அழைப்பு விடுத்தது விசிக தலைவர் திருமாவளவனுக்கே ஆகும். விசிக-வினருக்கு கடந்த தேர்தலில் 6 தொகுதியில் போட்டியிட்டனர். இந்த முறை அவர்கள் அதிக தொகுதிகள் போட்டியிட ஆர்வம் காட்டினாலும், அவர்களிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.

உள்ளே வருகிறதா தேமுதிக?

ஆனால், தொகுதி பங்கீட்டைக் காட்டிலும் பாமக கூட்டணிக்குள் வந்தால் விசிக வெளியேறும் என்பதை திருமாவளவன் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறார். இது திமுக-விற்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. தற்போது ராமதாஸ் திமுக கூட்டணியில் வர ஆர்வம் காட்டி வரும் நிலையில், திருமாவளவன்  விதிக்கும் நிபந்தனையால் திமுக-விற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல் இருக்கும் தேமுதிக ஒரு வேளை திமுக-வுடன் கூட்டணி சேர்ந்தால் 6 தொகுதிகள் வரை அளிக்க வாய்ப்புகள் உள்ளது. ஒருவேளை 6 தொகுதிகள் அளித்தால் கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினரின் தொகுதிகள் ஒதுக்கீட்டை குறைக்க வேண்டும் சூழல் உருவாகும்.

தனிப்பெரும்பான்மை முக்கியம்:

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளும் கடந்த முறை தலா  6 தொகுதிகளில் போட்டியிட்டனர். இந்த முறையும் அதே அளவிற்கான தொகுதிகளை தக்கவைக்க அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

கடந்த தேர்தலில் கூட்டணியில் உள்ள கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது உள்பட திமுக மொத்தம் 188 தொகுதிகளில் களமிறங்கியது. இந்த முறையும் திமுக  எப்படியும் தன்னுடைய வேட்பாளர்களை மட்டும் குறைந்தது 170 தொகுதிகளிலாவது களமிறக்க முடிவு செய்துள்ளது.

கூட்டணியில் பல கட்சிகள் இருந்தாலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லாமல் திமுக திட்டவட்டமாக உள்ளது. இனி வரும் நாட்களில் திமுக தலைமைக்கு கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதும், கூட்டணி கட்சித் தலைவர்களை சமரசம் செய்வதும் பெரும் சவாலாக அமையும் என்றே கருதப்படுகிறது.

Read Entire Article