மத்திய அரசின் கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திமுக சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக கோலம் வரைந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சாலைகளில் மத்திய அரசுக்கு எதிராகவும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் சாலையில் கோலம் வரைந்து நூதன முறையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது