DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?

1 year ago 7
ARTICLE AD

நாட்டின் 18ஆவது மக்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் அத்தனை பேரும் இன்று தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். குறிப்பாக திமுக எம்.பி.க்களில் பெரும்பாலானோர் அக்கட்சியின் முன்னாள் தலைவர் கருணாநிதி, தலைவர் ஸ்டாலின் ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டதுடன் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பெயரையும் குறிப்பிட்டனர்.

மக்களவையில் உதயநிதிக்கு புகழாரம்:

நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி வாகை சூடியது. இதில் திமுக சார்பில் 22 எம்.பி.க்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் ஏராளமானோர் உதயநிதி பெயரைக் குறிப்பிட்டு வாழ்க என்று நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டனர்.

குறிப்பாக, சின்னவர், உதயார், இளந்தலைவர், வருங்காலத் தமிழகம், இளைய தலைவர், எதிர்காலம் என்றெல்லாம் உதயநிதியை நாடாளுமன்றத்தில் வாழ்த்தினர்.  மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், பதவியேற்கும்போதே நீட் தேர்வு வேண்டாம் எனவும் முழக்கமிட்டார்.

இதில் உதயநிதி ஸ்டாலின் பெயரைக் குறிப்பிடாமல் எம்.பி.யாக உறுதிமொழி எடுத்தவர்கள் யார்? யார்? எனப் பார்க்கலாம்.

வட சென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, தமிழில் உறுதிமொழி ஏற்றார். அப்போது, ’’பெரியார், அண்ணா, கலைஞர் கொள்கைகள் வாழ்க, திராவிடம் வாழ தளபதி வாழ்க, தமிழ் வெல்லும்’’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார். தமிழில் உறுதிமொழி ஏற்ற கலாநிதி வீராசாமி, உதயநிதியின் பெயரைக் குறிப்பிடவில்லை.

அதேபோல தென் சென்னை தொகுதி திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், ’’வாழ்க தமிழ், வளர்க கலைஞர் புகழ், வாழ்க தலைவர் தளபதி, வாழ்க தமிழ் திருநாடு’’ என்று மட்டும் முழக்கமிட்டார்.

இதற்கிடையே ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. டி.ஆர்.பாலு உறுதிமொழி ஏற்ற கையோடு திரும்பினார். யார் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. மேலும் தர்மபுரி எம்.பி. மணி உறுதிமொழி எடுத்து, ’’வாழ்க கலைஞரின் புகழ், வாழ்க தலைவர் தளபதியின் புகழ்’’ என்று முழக்கமிட்டார்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கொமதேக எம்.பி., முதல்வர் ஸ்டாலின் பெயரையோ, அமைச்சர் உதயநிதி பெயரையோ குறிப்பிடவில்லை.

யார் பெயரையும் குறிப்பிடாத ஆ.ராசா

நீலகிரி எம்.பி. ஆ.ராசா யார் பெயரையும் குறிப்பிடவில்லை, தமிழில் உறுதிமொழி மட்டுமே எடுத்துக்கொண்டார். தொடர்ந்து பெரம்பலூர் தொகுதி திமுக எம்.பி.யாகப் பதவியேற்ற அருண் நேரு, வாழ்க தளபதி புகழ் என்று மட்டும் குறிப்பிட்டார்.

கனிமொழி கருணாநிதி என்னும் நான்

தொடர்ந்து தேனி எம்.பி. தங்கத்தமிழ்ச்செல்வன் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை மட்டுமே தனது சட்டைப் பையில் இருந்து எடுத்து காட்டினார். அதேபோல தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, கனிமொழி கருணாநிதி என்னும் நான் என்று கூறிப் பதவி ஏற்றார். எனினும் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.

திமுக சார்பில் 22 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இன்று பதவியேற்ற நிலையில், 9 எம்.பி.க்கள் மட்டுமே உதயநிதியின் பெயரைக் குறிப்பிடவில்லை. இதற்கிடையே மூத்த எம்.பி.க்களான ஜெகத்ரட்சகன், கலாநிதி மாறன் உள்ளிட்ட பலரும் உதயநிதியின் பெயரைக் குறிப்பிட்டு முழக்கமிட்டது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Read Entire Article