DMK Election Manifesto: தமிழகமே எதிர்பார்த்த திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: பெண்களுக்கு ₹2000 உரிமைத் தொகை! முதல் முக்கியமாக 10 வாக்குறுதிகள் என்னென்ன? - முழு விபரம் இதோ

2 weeks ago 3
ARTICLE AD

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் குழு தயாரித்த தேர்தல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிடப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கான உரிமைத் தொகை உயர்வு உள்ளிட்ட பல அம்சங்கள் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளன.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் என்னென்ன?

1. இதுவரை 1 முதல் 5 வரை படிக்கும் 19 லட்சம் மாணவ,மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் படி காலை உணவு வழங்கப்பட்டது. திராவிட மாடல் 2.0 ஆட்சியில் கூடுதலாக  15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.

2. ஒரு கோடியே 31 லட்சம் சகோதரிகள் மாதம் தோறும் 1000 ரூபாயை உரிமைத் தொகையாகப் பெறுகிறார்கள். இனி நமது ஆட்சிக் காலத்தில் 2000 ரூபாயாக உரிமைத் தொகையானது உயர்த்தி வழங்கப்படும்.

3. இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்பு செட்டுகள் வழங்கப்படும்.

4. அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

5.  முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.5 இலட்சமாகவும், காப்பீட்டுத் தொகை ரூ.10 இலட்சமாகவும் உயர்த்தப்படும்.

6. உயர் கல்விச் சேர்க்கையை அதிகரிக்க, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் படி மாதம் தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய், இனி 1500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

7 . நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

8 . கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ. 4,500-ஆக  உயர்த்தி வழங்கப்படும்.

9. பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தப்படும்

10.  முதியோர் உதவித்தொகை ரூ. 1,200 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 1500-இல் இருந்து ரூ. 2,500-ஆக உயர்த்தப்படும்.

Read Entire Article