தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், திமுக – அதிமுக கூட்டணிக்கு சாத்தியமே இல்லை என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தவிக்கும் தவெக

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக முதன் முதலில் போட்டியிட்டு, 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களைக் கைப்பற்ற முடியவில்லை. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக உடன் கைகோத்துள்ள நிலையில், தவெக ஆதரவு எம் எல் ஏக்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.

எனினும் மீதமுள்ள 5 எம் எல் ஏக்களைக் கூட்டணியில் சேர்க்க தவெக முயன்று வருகிறது. விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆட்சி அமைக்க முடியாமல் தவெக தவித்து வருகிறது.

அதிமுக - திமுக கூட்டணி

இதற்கிடையே அதிமுக ஆட்சி அமைக்க, திமுக வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, பொன்முடி ஆகிய மூத்த தலைவர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுக இடையே கூட்டணி சாத்தியமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பதிலளித்துள்ளார்.

நாங்கள் பிரதான எதிரிகள்

அவர் கூறும்போது, "திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளின் கூட்டணி சாத்தியம் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில், தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுகவாகிய நாங்கள் பிரதான எதிரிகள்..." என்று தெரிவித்துள்ளார்.

#WATCH | Chennai, Tamil Nadu | On being asked if an alliance between DMK and AIADMK is possible, DMK spokesperson TKS Elangovan says, "...I don't think it is possible because we, DMK and AIADMK, are the major enemies in Tamil Nadu politics..." pic.twitter.com/Cal8T2BPU2

— ANI (@ANI) May 8, 2026

முன்னதாக நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம் என்று கூறி இருந்த நிலையில், இன்று இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.