Director Bharathiraja : மறைந்த இயக்குனர் பாரதிய ராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

2 hours ago 1
ARTICLE AD

தேனி மாவட்டம் அல்லிநகரம் என்ற ஊராட்சியில் பெரியமாத்தேவர் - மீனாட்சியம்மாள் (எ) கருத்தம்மாள் தம்பதிகளுக்கு 1941ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி பிறந்தவர் இயக்குனர் பாரதிராஜா.இவரது இயற்பெயர் சின்னச்சாமி. சினிமா மீது கொண்ட ஈர்ப்பால் சென்னைக்கு வந்து, பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தமிழ் திரையுலகில் இயக்குனர் இமயம் என அன்போடு அழைக்கப்பட்டு வந்தார்.

1977 ஆம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார் பாரதிராஜா. கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், புதிய வளர்ப்புகள், கருத்தம்மா, கல்லுக்குள் ஈரம் மண்வாசனை,  டிக் டிக் டிக், காதல் ஓவியம், வேதம் புதிது  உள்ளிட்ட பல காவியத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக 2004 ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய 'பத்மஸ்ரீ' விருதைப் பெற்றார்.

இவருக்கு மனோஜ்  ஜனனி இரு பிள்ளைகள் பிறந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி உடல்நலக் குறைவால் மகன் மனோஜ் காலமானார். இவரது மறவை தொடர்ந்து பாரதிராஜா உடல் நிலை பாதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர். இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக முதலமைச்சர் விஜய், இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாரதிராஜா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Read Entire Article