dindigul: உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பழனி அடிவார ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

1 year ago 7
ARTICLE AD

பழனி கோயிலை சுற்றி, கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து உள்ள ஆக்கிரமிப்பாளர்களில் மாற்று இடம் செல்ல மறுக்கும் ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து,  அவர்களுக்கு 24 மணிநேர கால அவகாசம் வழங்க வேண்டும். அதன் பின்  மாற்று இடம் செல்ல மறுக்கும் ஆக்கிரமிப்பாளர்களை, தாசில்தார் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் மேற்கு கிரிவலப் பாதையில் அண்ணா செட்டி மடம் என்ற இடத்தில் 120க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் குடியிருப்புகளை அகற்ற கோரி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கி அனைத்தையும் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து வருவாய்த் துறையினர் குடியிருப்பு வாசிகளுடன் கடந்த ஆறு மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி மாற்று இடம் வழங்கினர்.

இந்த நிலையிலும் பழனி கோயிலை சுற்றி, கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து உள்ள 139 ஆக்கிரமிப்பாளர்களிடம், மாற்று இடம் செல்ல சம்மதம் தெரிவித்து கையொப்பம் இடும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு,  கால அவகாசம் கொடுக்க வேண்டுமெனவும், மாற்று இடம் செல்ல மறுக்கும் ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து,  அவர்களுக்கு 24 மணிநேர கால அவகாசம் வழங்க வேண்டுமெனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

குறிப்பிட்டிருந்த கால அவகாசம் முடிந்தும் ஆக்கிரமிப்புகள் எடுக்காதவர்களை தாசில்தார் தலைமையில் உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தாசில்தார்  தரப்பில் பதில் மனு  தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் இன்று பழனி மலை அடிவாரத்தில் கடைகள் மற்றும் 100 குடியிருப்புகளை அகற்றும் பணி  நடைபெற்றது. உயர்நீதிமன்ற உத்தரவினை ஏற்று பல ஆண்டுகளாக குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் தரப்பட்டது. இதையடுத்து குடியிருப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டினர்.

தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று வருவாய்த்துறை, கோயில் நிர்வாகம் மற்றும் போலீசார் உதவியுடன் பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி வானங்களை கொண்டு வரபட்டு  கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பழனி மலை அடிவாரத்தில் படிப்பாதை அருகில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த பிரபல தனியார் பஞ்சாமிர்த கடையான சித்தநாதன் பஞ்சாமிர்த கடையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்து அகற்றப்பட்டது.

குடியிருப்புகளை அகற்றும்போது குடியிருப்பு வாசிகள் தடுத்து இடையூறு செய்யலாம் என்பதால் பாதுகாப்பு பணியில் முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பழனி மலை அடிவாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இடித்து அகற்றும் பணி நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read Entire Article