தனுஷ் நடித்துள்ள கர படத்தின் இசை வெளியீட்டு நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய தனுஷ் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக வடசென்னை 2 படத்தின் அப்டேட் கொடுத்தார். இதுதவிர்த்து போயஸ் கார்டனில் வீடு வாங்கியது பேசியதற்காக தான் ட்ரோல் செய்யப்பட்டது குறித்து தனுஷ் இந்த நிகழ்ச்சியில் விளக்கமளித்தார்.

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர திரைப்படம் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இபப்டத்தின் ஆடியோ லாஞ்ச் நேற்று ஏப்ரல் 19 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பொதுவாக தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் தன் மீதான விமர்சனங்கள் குறித்து ஓப்பனாக பேசுவார். அப்படி அவர் தான் போயஸ் கார்டனில் வீடு வாங்கியது குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேசியிருந்தார். 'நான் எல்லாம் போயஸ் கார்டரில் வீடு வாங்க கூடாதா' என தனுஷ் பேசியது சமூக வலைதளங்களில் மீம்களாக பகிரப்பட்டன. இதுகுறித்து கர படத்தின் இசை வெளியீட்டில் தனுஷ் ஓப்பனாக பேசினார்

குட்டி கதை சொன்ன தனுஷ்

போயஸ் கார்டனின் வீடு பற்றி பேசியது ட்ரோல் செய்யப்பட்டது குறித்து பேசிய தனுஷ் " அதை எப்படி எடுத்துக்கனும் என்பது நம்ம கிட்டதான் இருக்கு. ஒரு குட்டி கத சொல்றேன். நான் ஏர்போர்டில் பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தபோது அந்த டிரைவர் என்னிடம் செல்ஃபீ கேட்டார். . ஃபோட்டோ எடுத்தபின் தான் யாரிடமும் செல்ஃபீ கேட்டதில்லை நீங்கள் போயஸ் கார்டனில் வீடுவாங்கியது குறித்து பேசியது என் மகனுக்கு ரொம்ப பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது சார் என்றார். அதனால் நீங்க மீமாக பார்த்தால் மீம். இன்ஸ்பிரேஷனாக பார்த்தால் இன்ஸ்பிரேஷன். அதுவும் ஒரு என்டர்டெயின்மெண்ட் தான . என்டர்டெயின்மெண்ட் தான நம்ம வேல" என தனுஷ் பேசினார்