Delta Weatherman Alert: ரெடியா... மே முதல் வாரம் கொட்டப்போகுது கோடை மழை.! எந்த எந்த மாவட்டங்களில்.? டெல்டா வெதர்மேன் அலர்ட்

1 month ago 6
ARTICLE AD

செப்டம்பர் வரை நீடிக்கும் கோடை காலம்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வீட்டிற்குள் மக்கள் முடங்கிக்கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த வருடம் முன்னதாக தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் எனவும், எல் நினோ நிகழ்வால் தமிழ்நாட்டின் கோடை காலம் ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்க வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சூப்பர் எல் நினோ- பருவமழை பாதிப்பு

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இயல்பாக ஜூன் 1ம் தேதி கேரளா, தமிழ்நாட்டில் துவங்கும் தென்மேற்கு பருவமழை இந்தாண்டும் மே 4 வது வாரத்தில் ஒரு வாரம் முன்னதாக கேரளாவில் துவங்க கூடும் என தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை முன்னதாக துவங்கினாலும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் சராசரி மழையை விட குறைவான மழை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் அக்டோபர் மாதம் பசிபிக் பெருங்கடலில் உருவாகும் சூப்பர் எல் நினோ நிகழ்வு இந்தாண்டு தென்மேற்கு பருவமழையை இந்தியா முழுதும் பாதிக்க கூடும் எனவும் கூறியுள்ளார்.

கோடை வெப்பம் தீவிரமைடயும்

மேலும் ஜூன், ஜூலை மாதங்களில் கடலோர தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வெப்ப அலை வீச வாய்ப்பு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழ்நாட்டில் இந்தாண்டு கோடை வெப்பம் ஜூன், ஜூலை மாதங்களிலும் தொடர வாய்ப்பு எச்சரித்துள்ளார்.  கடல்சார்ந்த அலைவுகளின் வருகை, மேற்கத்திய இடையூறு காரணமாக மே முதல் வாரத்தில் கோடை மழை தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

டெல்டா வெதர்மேன் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் பரவலாக இடி,மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.மே முதல் வாரத்தில் தீவிரமடையும் கோடை மழையால் உள்மாவட்டங்களில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் தற்காலிகமாக குறைய வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article