Crime: திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான கல்லூரியில் மாணவி தற்கொலை? உறவினர்கள் போராட்டம்

1 year ago 7
ARTICLE AD
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து சுங்கசாவடி அருகே தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை. கல்லூரி நிர்வாகத்தினர் தனது மகளை கொலை செய்து விட்டதாக கூறி கல்லூரி முன்பு வளாகத்தின் இறந்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் போராட்டம். திமுக எம்எல்ஏ கதிரவனின் கல்லூரி என்பதால் போலீசார் கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. தாரணியின் கழுத்தில் பெல்டால் கழுத்தை நெறித்து இறந்தது போன்று உள்ளதால் இதற்கு உரிய விசாரணை வேண்டும் என்று தாரணியின் உறவினர்கள் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாகத்தின் முன்பு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினால் அதை தடுக்கவும் குண்டர்களை வாயில் முன்பு நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. "தனது மகள் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்" என்ற பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article