Crime: கள்ளக்காதலை காட்டிக் கொடுத்த மகன்.. கதையை முடித்த தாய்.. நடந்தது என்ன?

3 days ago 2
ARTICLE AD

ஆந்திராவில் திருமணத்தை மீறிய உறவின் காரணமாக மகனை தாய் தனது காதலனுடன் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தாய் மீது ஏற்பட்ட சந்தேகம்

ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள அடோனி மண்டலத்திலுள்ள ஜி. ஹொசல்லி கிராமத்தில் வீரேந்திரா என்ற 15 வயதுடைய சிறுவன் தனது தாயார் கங்கம்மாவுடன் வசித்து வந்தார். இதனிடையே வீரேந்திராவுக்கு தனது தாயின் நடத்தையில் சந்தேகம் ஏற்படுள்ளது. தர்கப்பா என்ற நபருடன், கங்கம்மா திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நேரம் செலவிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் வீரேந்திரா தனது தாயின் நடத்தை குறித்து அவரிடம் கேள்வியெழுப்பியுள்ளார். இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அவமானத்தால் மகனை கொன்ற கொடூரம்

இந்த நிலையில் தனது தாயின் உறவு பற்றி உறவினர்கள் மற்றும் தான் வசித்து வந்த கிராமத்து மக்களிடம் வீரேந்திரா தெரிவித்து குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு அவமானம் நேர்ந்ததாலும், தங்களுடைய உறவை காட்டிக் கொடுத்ததாலும் , இனிமேல் அதனை தொடர முடியாது என பல விஷயங்களால் கோபப்பட்ட கங்கம்மா வழக்கத்தை விட வீரேந்திராவிடம் தகராறு செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தர்கப்பா உதவியுடன் மகன் என்று கூட பாராமல் வீரேந்திராவை கொலை செய்துள்ளார். பின்னர் உடலை  ஜி. ஹொசல்லி கிராமத்தில் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மயானத்தில் ரகசியமாக இருவரும் புதைத்துள்ளனர். இந்த விஷயத்தை மறைக்க தனது மகன் வீரேந்திரா காணாமல் போனதாக கங்கம்மா போலீசில் புகாரளித்தார். அவரும் போலீசாருடன் சேர்ந்து தேடுதல் முயற்சியில் ஈடுபட்டார்.

சிறப்பு புலனாய்வு குழுவால் சிக்கிய குற்றவாளிகள்

இதனிடையே  விசாரணையில் தாமதம் ஏற்படுவதாகக் குற்றம் சாட்டி, விரைந்து தன் மகனை கண்டிபிடித்து தரக்கோரியும் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கில் நீதிபதிகள் விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. இதனடிப்படையில் கண்காணிப்பு வளையத்திற்கு கங்கம்மா, தர்கப்பா ஆகியோர் வந்து வாக்குமூலம் அளித்தனர். இதில் பல முரண்பாடுகள் இருப்பதை காவல்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப உதவியுடன் இருவரின் செல்போன் அழைப்புகள், உரையாடல்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் கிராம மக்களிடம் ரகசியமாக தகவல்கள் சேகரிக்கப்பட்டது. நடத்தப்பட்ட விசாரணையில் கங்கம்மா, தர்கப்பா இருவரும் சேர்ந்து கொலை செய்தது கண்டறியப்பட்டது. அவர்களிடன் கிடுக்குப்பிடி விசாரணை செய்ததில் ஒப்புக்கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் கிராமத்தின் மயானத்தில் இருந்து வீரேந்திரா உடல் தோண்டியெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கங்கம்மா, தர்கப்பா இருவரையும் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Read Entire Article