Crime: 64 வயது மூதாட்டி கற்பழிப்பு, கழுத்தை அறுத்து கொன்ற சகோதரர்கள் - நடந்தது என்ன?

10 months ago 7
ARTICLE AD

Crime: ஆந்திராவில் 64 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை அறுத்து கொன்ற வழக்கில் சகோதரர்கள் இருவரை காவல்துறை கைது செய்தது.

64 வயது மூதாட்டி கொலை:

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே 64 வயது மூதாட்டி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மூன்று குழுக்களை அமைத்து, போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், யார்லா ரமணா எனும் அந்த மூதாட்டியை கொன்றதாக, பலபர்த்தி மஞ்சு மற்றும் அவரது மூத்த சகோதரர் பலபர்த்தி சம்பா எனும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் சிக்கியது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

நடந்தது என்ன?

பிரதிபடு காவல் ஆய்வாளர் சீனிவாச ராவ் சம்பவம் குறித்து பேசுகையில், “பெத்தநந்திபாடு கிராமத்தைச் சேர்ந்த ரமணா, ஆரம்ப சுகாதார மையம் (PHC) அருகே ஒரு குடிசையில் வசித்து வந்தார். அவர் தினமும் அதிகாலை 4 மணிக்கு அருகில் உள்ள சாய்பாபா கோயிலை சுத்தம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.  இந்நிலையில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி, அவர் கோயிலுக்கு வராததால், ​​காவலாளி தேவரகொண்டா ரத்னம் தனது மகள் பல்லப்பு வீரம்மாவிடம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் மூதாட்டியின் வீட்டிற்குச் சென்றபோது, ​​கழுத்தில் கத்திக்குத்து காயங்கள், அவரது அந்தரங்க உறுப்புகளில் ரத்தக் கறைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கான அறிகுறிகள் ஆகியவற்றுடன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில், குற்றத்தில் மஞ்சு மற்றும் சம்பா ஆகியோரின் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர், இருவரும் ஒரே மாதிரியான குற்றங்களில் ஈடுபட்ட வரலாற்றையும் கொண்டுள்ளனர்” என தெரிவித்தார்.

குற்றவாளிகள் சிக்கியது எப்படி?

பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த மஞ்சு சமீபத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மூதாட்டியின் கொலை தொடர்பாக வீரம்மா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. குற்றவாளிகள் மொபைல் போன் பயன்படுத்தாததால், தடயவியல் சான்றுகள், கைரேகைகள் மற்றும் பெத்தநந்திபாடு மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். பெரேச்சர்லா, விசாகப்பட்டினம், அனகப்பள்ளி மற்றும் ஐதராபாத்தில் உள்ள சகோதரர்களின் உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

பல நாட்கள் போலீசாரிடமிருந்து தப்பித்த பிறகு, வெள்ளிக்கிழமை மாலை பெத்தநந்திபாடுவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது, ​​மஞ்சுவும் சம்பாவும் தனியாக வசிக்கும் வயதான பெண்களை குறிவைத்து, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். தங்கள் போதை பழக்கத்திற்கு ஆதரவாக முந்தைய குற்றங்கள் மற்றும் சிறிய திருட்டுகளை அவர்கள் ஒப்புக்கொண்டனர். மஞ்சு திருமணமாகாதவர், அதே நேரத்தில் சம்பாவின் மனைவி அவரது குற்றவியல் நடத்தை காரணமாக அவரை விட்டுச் சென்று தனியாக வாழ்ந்து வருகிறார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Read Entire Article