தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்ததால் குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் அபாய ஒலி எழுப்பி வெளியேற்றினர். மேலும், ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றால சீசனை அனுபவிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்புகின்றனர்.