<h2 style="text-align: justify;">கூலி</h2>
<p style="text-align: justify;">லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் கூலி. சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். கிரீஷ் கங்காதரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கூலி படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்களை வெளியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் ஒரு கேரக்டரை படக்குழு வெளியிட்டுள்ளது</p>
<h2 style="text-align: justify;">செளபின் சாஹிர்</h2>
<p style="text-align: justify;">அதன்படி, மலையாள நடிகர் செளபின் சாஹிர் இப்படத்தில் நடிக்கவுள்ளார். இவரது கதாபாத்திரத்தின் பெயர் தயால். மலையாளத்தில் வெளியான கும்பலங்கி நைட்ஸ் , ரோமான்ச்சம் , மஞ்சுமெல் பாய்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த செளபின் கூலி படத்தின் வழியாக தமிழுக்கு அறிமுகமாகிறார். இப்படத்தில் இவர் வில்லனாக நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது</p>