Congress: கைவிட்ட பீகார்.! ராஜஸ்தான், தெலங்கானாவில் பாஜகவை 3வது இடத்திற்கு தூக்கியடித்த காங்கிரஸ்

4 weeks ago 2
ARTICLE AD

பீகாரில் படு தோல்வியில் காங்கிரஸ்

நாடே ஆவலோடு எதிர்பார்த்திருந்த பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளியாகி வருகிறது. பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 200 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இண்டியா கூட்டணியானது 38 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள படு தோல்வி கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதே நேரம் நாடு முழுவதும் 8 இடங்களில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு சட்டமன்ற தேர்தலில் அண்டா தொகுதிகள் பாஜகவை இரண்டாம் இடத்திற்கு தள்ளி காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

தெலங்கானா, ராஜஸ்தானில் அசத்தும் காங்கிரஸ்

காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் ஜெயின், பாஜக வேட்பாளர் மோர் பால் சுமனை விட 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.  ஏற்கனவே சுயேட்சை வேட்பாளர் நரேஷ் மீனா இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் அவரை தற்போது பாஜக வேட்பாளர் கோபால் சுமன் முந்தியுள்ளார். உள்ளார்.
இதேபோல தெலங்கானா சட்டமன்ற தொகுதியில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை காங்கிரஸ் கட்சி 3வது இடத்திற்கு தள்ளியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் நவீன் யாதவ், பாஜக வேட்பாளர் தீபக் ரெட்டி லங்காலாவை விட 65ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இரண்டாம் இடத்தில் பாரத் ராஷ்ரிய சமிதி கட்சி வேட்பாளர் மங்கந்தி சுமதா உள்ளார்.

இடைத்தேர்தல் முடிவு என்ன.?

பஞ்சாப்பில் டர்ன்டரன் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம்ஆத்மி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். இதில் பாஜக வேட்பாளர் 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோச்சா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பாஜக உள்ளது.அதே நேரம் ஜம்மு காஷ்மீரில் உள்ள நக்ரோட்டா தொகுதியில் பாஜக வேட்பாளர் தெவ்யானி ரானா வெற்றி பெற்றுள்ளார். இதே போல ஒடிசாவில் உள்ள நூஅப்படா தொகுதியில் பாஜக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

Read Entire Article