Congress: கம்பி நீட்டுகிறதா காங்கிரஸ்? திமுக கூட்டணிக்கு கல்தாவா? விஜய்க்கு சிவப்பு கம்பளமா?

1 month ago 6
ARTICLE AD

ஒட்டுமொத்த தமிழ்நாடும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகியது. திமுக ஆட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகிய நிலையில், கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கும் வகையில் தமிழ்நாட்டில் 110 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.

பெரும்பான்மையை பிடிக்குமா தவெக?

தற்போது வரை எந்தவொரு தொகுதியிலும் எந்த கட்சியினரும் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றதாக அறிவிக்கவில்லை. ஆனாலும், தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆட்சியைப் பிடிப்பதற்கே வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இன்னும் பல சுற்றுகளின் வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது.

தற்போதைய சூழலில், தவெக-வே ஆட்சியமைக்கும் பலத்துடன் உள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க 118 தொகுதிகளில் பெரும்பான்மை பலம் இருக்க வேண்டும். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினர் 118 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெற முடியவில்லை என்றால், அவர் கூட்டணிக்கு மற்ற கட்சியினரை அழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

கூட்டணி தாவுகிறதா காங்கிரஸ்?

விஜய் கூட்டணி அமைத்துதான் ஆட்சியமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அவருடன் கூட்டணி செல்ல காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் தற்போதைய நிலவரத்தின்படி 4 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால், சட்டமன்ற தேர்தலின் முன்பு வரை தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் காங்கிரசுக்கும் இடையே தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

திமுக-வுடன் காங்கிரஸ் கூட்டணி நீடிப்பதில் ராகுல்காந்தி, ப்ரியங்கா காந்தி போன்றவர்களுக்கு உடன்பாடு இல்லை என்று தகவல்கள் வெளியானது. சோனியாகாந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரே திமுக கூட்டணியில் நீடிக்க வலியுறுத்தினர்.

என்ன நடக்கும்?

தற்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பறிபோகியுள்ள நிலையில், இனியும் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் நீடிக்க காங்கிரஸ் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. கேரளாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், தமிழ்நாட்டிலும் ஆட்சியில் கூட்டணியில் இருக்க காங்கிரஸ் விரும்புவதாக கூறப்படுகிறது.

இதனால், விஜய் தனிப்பெரும்பான்மையான 118 தொகுதிகளை கைப்பற்றாவிட்டால் காங்கிரஸ் முதல் கட்சியாக கூட்டணியில் செல்ல தயாராக இருக்கும் என்றே கருதப்படுகிறது. திமுக கூட்டணி குறித்து அதிருப்தி தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சியினரும் கூட்டணி மாற வாய்ப்புகள் பிரகாசம் என்றே கருதப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாமக-வும் விஜய்க்கு ஆதரவு அளிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தவெகவின் இளம் வேட்பாளர் ரேவந்த் சரண்..மதுரவாயல் தொகுதியில் 11 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

Read Entire Article