<p>ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டிய எரிவாயு செல்லமுடியாமல் தடைபட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சமையல் எரிவாயு முன்பதிவு செய்வதிலும், புதிய சிலிண்டர் வாங்குவதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதிலும் வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவு செய்ய 25 நாட்கள் என்ற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர் விநியோகம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கள்ள சந்தையில் 6 ஆயிரம் முதல் 8ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தக சிலிண்டர் விற்பனை செய்யப்ட்டு வருகிறது.</p>
<p>இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி வர்த்தக சிலிண்டர் விலையானது உயர்த்தப்படும். அந்த வகையில் இன்று ஓட்டல் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வர்த்தக சிலிண்டர் விலையானது உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.968 உயர்ந்து, ரூ.3237க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் ஓட்டல்களில் மேலும் உணவு விலை அதிகரிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/how-to-protect-car-engine-from-overheating-in-hot-weather-257764" width="631" height="381" scrolling="no"></iframe></p>