Coimbatore Power Cut Tomorrow: கோவை மாவட்டத்தில் நாளை (21ம் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது. அதனால மக்களே நீங்கள் முன்கூட்டியே குடிநீர் பிடித்தல், தண்ணீர் நிரப்பிக் கொள்ளுதல் போன்ற முக்கியமான அத்தியாவசிய தேவைகளை செய்துக்கோங்க. அப்படியே உங்க ஏரியாவும் லிஸ்ட்ல இருக்கான்னு செக் செய்து கொள்ளுங்க.

கோவை மாவட்டத்தில் நாளை (ஜூலை 21) இந்த பகுதியில் எல்லாம் மின்சார விநியோகம் இருக்காதுங்க. மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்தில் சில முக்கிய இடங்களில் நாளை (ஜூலை 21- திங்கட்கிழமை) மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம்.

நாளைய மின் தடை எங்கே?

பட்டணம்

பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம் , பள்ளபாளையம் EB அலுவலகம் , கரவலி சாலை , நாகமாநாயக்கன் பாளையம் , காவேரி நகர் , காமாட்சி புரம் .

கனியூர்

கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம்.

காடுவெட்டிப்பாளையம்

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு பகுதி