Coimbatore Power Cut (11-12-2025): கோவையின் முக்கிய பகுதிகளில் நாளை கரண்ட் இருக்காது - உங்க ஏரியாவும் லிஸ்டில் இருக்கானு செக் பண்ணுங்க

22 hours ago 1
ARTICLE AD

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( டிசம்பர் 11, 2025, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்

பீளமேடு

பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம்.

கோயில்பாளையம்

சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர்.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Read Entire Article