CM ஆனதும் வீடு மாறும் விஜய்..! அடையாறு? பட்டினப்பாக்கம்? எங்கு குடியேறுவார்? புதிய அரசியல் மையம்

1 month ago 6
ARTICLE AD

TVK Vijay: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தற்போது பனையூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பனையூரில் தவெக விஜய்:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவில் 108 இடங்களில் வென்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. அனாலும், மெஜாரிட்டி இல்லாததால், ஆட்சியமைக்க இன்னும் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதற்காக யார் யாரிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசித்து வருகிறார். பனையூரில் கட்சி நிர்வாகிகள் மற்றும் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் காலை முதல் கலந்தாலோசித்து வருகிறார். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும், அதைதொடர்ந்து கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் தனியார் விடுதியில் தங்கவைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய் வீடு மாற திட்டம்?

பனையூரில் வசித்து வரும் விஜய், அதே பகுதியில் தான் தனது கட்சியின் தலைமை அலுவலகத்தையும் நிறுவியுள்ளார். இதன் காரணமாகவே ஒவ்வொரு முறையும் அரசியல் பயணங்களுக்காக நீண்ட தூரம் பயணித்து தலைநகர் சென்னைக்கு வரவேண்டியுள்ளது. இதனை சுட்டிக்காட்டியே, ”பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றாலும், மக்களால் அவரை அணுக முடியாது” என சில அரசியல் தலைவர்கள் விமர்சித்தனர். முன்பு கட்சி பணிகள் மட்டுமே இருந்ததால், பனையூரில் தங்கி இருந்து அவற்றை கையாள்வது மிகவும் எளிதான காரியமாக இருந்தது. ஆனால், தற்போது முதலமைச்சராகவும் பொறுப்பேற்க உள்ளதால், ஒவ்வொரு முறையும் தலைமை செயலகத்தில் இருந்து பனையூர் வரை பயணிப்பது மிகவும் சிரமமானதாகவும், நேரய விரயமாகவும் இருக்கும். எனவே காலத்தின் முக்கியத்துவத்தை கருதி விஜய் பனையூரிலிருந்து, சென்னை நகருக்குள் தனது வசிப்பிடத்தை மாற்றுவார் என கூறப்படுகிறது.

விஜய்க்கான வாய்ப்புகள் என்ன?

விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றால் அவர் வசிப்பதற்காக, அரசு சார்பில் பசுமை வழிச்சாலையில் வீடு ஒதுக்கப்படும். விரும்பினால் அதையே தனிப்பட்ட அலுவலகம் மற்றும் வசிப்பிடம் என இரண்டாகவும் விஜய் பயன்படுத்தலாம். இதுபோக அடையாறில் தனது பெற்றோர் வசிக்கும் வீடு மற்றும் பட்டினப்பாக்கத்தில் தனக்கென சொந்தமாக உள்ள வீடு என மேலும் இரண்டு ஆப்ஷன்களும் விஜய்க்கு உள்ளன. ஒருவேளை விஜய் பனையூரிலிருந்து மாறி சென்னை நகருக்குள் குடியேற விரும்பினால், மேற்குறிப்பிடப்பட்ட ஏதேனும் ஒரு வீட்டில் வசிக்க தொடங்கலாம்.

அரசு இல்லத்தில் தங்குவாரா விஜய்?

அரசு சார்பில் வழங்கப்படும் இல்லம் போதுமான கட்டமைப்புகளை கொண்டிருந்தாலும், விஜய் அங்கு தங்குவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது. கட்சி சார்ந்த பணிகள் தொடர்பாகவும் நிர்வாகிகள் பலர் சந்திக்க வரக்கூடும் என்பதோடு, தனிப்பட்ட வாழ்க்கையில் பொதுவெளிச்சம் வீழ்வதையும் விரும்புவதில்லை. இதன் காரணமாக பசுமை வழிச்சாலையில் தனக்கு ஒதுக்கப்படும் இல்லத்தை, முதலமைச்சர் அலுவலகமாக மட்டுமே பயனப்டுத்த அதிக வாய்ப்புள்ளது.

ALSO READ | மாவட்ட வாரியாக தவெக, திமுக, அதிமுக வெற்றி & தோல்வி? கோட்டையே காலி - கொங்கு தந்த ஷாக்

அடையாறு வீடா? பட்டினப்பாக்கம் அபார்ட்மெண்டா?

விஜயின் பெற்றோர் வசிக்கும் வீடு ஒன்று அடையாறில் உள்ளது. அங்கு தங்கினால் தனது பணிகளால் பெற்றோருக்கு தொந்தரவு ஏற்படக்கூடும் என்பதோடு, அந்த வீடு முக்கிய பகுதியில் இருப்பதால் விஜயின் வருகையால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளதாக கருதலாம். இதன் காரணமாக, பட்டினப்பாக்கத்தில் கடற்கரையோரமாக தனக்கு சொந்தமாக உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டியில் விஜய் குடியேறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விசாலமான இடவசதி இருப்பதால், அரசு பணிகள் மட்டுமின்றி கட்சி பணிகளையும் அங்கிருந்து எளிதாக கையாள முடியும். தலைமை செயலகம் மற்றும் பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லம் ஆகிய இரண்டுக்கான அணுகலும், பட்டினப்பாக்கத்தில் இருந்து மிகவும் எளிமையாக இருக்கும். எனவே, முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் விஜய் பட்டினப்பாக்கத்திற்கு மாறுவாரா? அல்லது பனையூரையே தமிழக அரசியலின் மையப்புள்ளியாக மாற்றுவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Read Entire Article