CLAT 2026: சட்டப் படிப்புகளில் சேர்ந்து கனவை நனவாக்கலாம்; தேர்வு எப்போது? விண்ணப்பிப்பது எப்படி?

4 months ago 4
ARTICLE AD

CLAT 2026 Registration: தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (NLUs) சட்ட நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவைத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் இளங்கலை, முதுகலை சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமும் தகுதியும் கொண்ட மாணவர்கள் consortiumofnlus.ac.in. என்ற இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க முடியும்.

அது என்ன CLAT நுழைவுத் தேர்வு?

பொது சட்ட நுழைவுத் தேர்வு ஒருங்கிணைந்த 5 ஆண்டு இளங்கலை சட்டப் படிப்பு மற்றும் முதுகலை படிப்புகளில் சேரவும் பிற சட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கவும் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தத் தேர்வுக்கு, விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கி உள்ளது. அக்டோபர் 31ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு எப்போது?

2025ஆம் ஆண்டு, டிசம்பர் 7ஆம் தேதி மதியம் 2 முதல் 4 மணி வரை இந்த நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

தேர்வு முறை எப்படி?

CLAT தேர்வில் ஆங்கில மொழி, நடப்பு நிகழ்வுகள் உட்பட பொது அறிவு, சட்ட பகுத்தறிவு, தர்க்க பகுத்தறிவு, அளவு நுட்பங்கள் உள்ளிட்ட ஐந்து வெவ்வேறு பாடப் பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். இது 120 எம்சிக்யூ அடிப்படையிலான கேள்விகளைக் கொண்டிருக்கும்.

அதே நேரத்தில் முதுகலை CLAT தேர்வில், இளங்கலைத் தேர்வுடன் ஒப்பிடும்போது அதிகமான பாடங்கள் உள்ளன. குறிப்பாக, அரசியலமைப்புச் சட்டம், நீதித்துறை, குடும்பச் சட்டம், குற்றவியல் சட்டம், சொத்துச் சட்டம், நிர்வாகச் சட்டம், ஒப்பந்தச் சட்டம், டார்ட்ஸ், நிறுவனச் சட்டம், பொது சர்வதேச சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், தொழிலாளர் மற்றும் தொழில்துறை சட்டம், வரிச் சட்டம் உள்ளிட்டவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.

CLAT 2026 Registration: தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள், https://consortiumofnlus.ac.in/  என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

முகப்புப் பக்கத்தில், "CLAT 2026 Registration" என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்

இ மெயில் முகவரி, தொலைபேசி எண், தனிட்ட, கல்வி விவரங்கள் மற்றும் பிற தகவல்களை அளித்து முன்பதிவு செய்ய வேண்டும்.

புகைப்படம், கையெழுத்து, பிற ஆவணங்கள் கேட்கபடும்.

அனைத்து விவரங்களையும் கொடுத்து, விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், நாடு முழுவதும் உள்ள 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்களுக்கு: https://consortiumofnlus.ac.in/

Read Entire Article