800 கோடியைத் தொட்ட பிரபாஸின் கல்கி

பிரபாஸ் நடித்து நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகியுள்ள கல்கி படம் 10ஆவது நாளாக திரையரங்குகளில் ஓடு வருகிறது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ள இப்படம் இந்த ஆண்டில் அதிகம் வசூல் ஈட்டிய படமாக வெற்றிபெற்றுள்ளது. இதுவரை 9 நாட்களில் கல்கி திரைப்படம் உலகளவில் 800 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க : Kalki 2898 AD Box Office: 9 நாள்களில் 800 கோடிகளைக் கடந்த வசூல்.. கல்கி 2898 AD படம் அடுத்தடுத்து வசூல் சாதனை!

ராயன் இசை வெளியீடு

தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன் படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சந்தீப் கிஷன் , காளிதாஸ் ஜெயராம் , செலவராகவன் , எஸ்.ஜே.சூர்யா , பிரகாஷ் ராஜ் , அபர்ணா பாலமுரளி , துஷாரா விஜயன் , வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ராயன் படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் மாலை 6 மணியளவில் நடைபெற இருக்கிறது.

இந்தியன் 2 ப்ரோமோஷனில் கமல்ஹாசன்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகிறது. லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியா , சிங்கப்பூர் , மலேசியா , துபாய் உள்ளிட்ட நாடுகளில் தற்போது இந்தியன் 2 படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்வுகளில் படக்குழுவினர் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்கள்.

இந்த நிகழ்வில் இந்திய 2 படத்தின் டிரைலரில் கமல் நேதாஜி வழியில் நான் காந்திய வழியில் நீங்கள் என்கிற வசனம் பேசியிருந்தது குறித்து பத்திகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கமல் “கவிஞர்களாக நாம் எல்லா உணர்வுகளையும் தொட்டுப் பார்க்கலாம். இது ஒரு கலைப்படைப்பு. ரௌத்திரம் பழகு என பாரதியார் சொல்லி விட்டதால் எல்லாரிடமும் பழக வேண்டியது இல்லை. நேதாஜியின் வீரத்தை ஒட்டுமொத்தமாக மறக்க வேண்டிய அவசியமில்லை, காந்தியின் பொறுமையை ஒட்டுமொத்தமாக இழக்க வேண்டிய அவசியமில்லை.” என்று பதிலளித்துள்ளார்

மேலும் படிக்க : Indian 2 Kamal Haasan: நேதாஜி வழியில் இந்தியன் தாத்தா.. காந்தியின் பொறுமையை மறக்க வேண்டாம்.. கமல்ஹாசன் பளிச்!

சமந்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

ஹைட்ரஜன் பெராக்சைடை நெபுலைசேஷன் என்ற சிகிச்சை முறை பற்றி தன் பதிவில் சமந்தா குறிப்பிட்டு இருந்தார். அப்படி செய்வது ஆபத்தானது என பல தரப்பில் இருந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமந்தாவை பிரபல கல்லீரல் நிபுணரான மருத்துவர் ஃபிலிப்ஸ் சமந்தாவை கடுமையாக சாடி பதிவிட்டார். சமந்தா பரிந்துரைத்த முறையற்ற மாற்று மருத்துவ குறிப்புக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து சமந்தாவை சிறையில் அடைக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அந்த வரிசையில் தற்போது இந்திய பேட்மிண்டன் வீராங்கனை மற்றும் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜூவாலா கட்டா தன் எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளார்.

“தன்னை பின்தொடரும் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு மருந்துகளை பரிந்துரைக்கும் பிரபலத்திடம் ஒரே ஒரு கேள்வியை முன்வைக்கவிரும்புகிறேன்... உதவி செய்வதே உங்கள் நோக்கம் எனப் புரிகிறது. ஆனால், ஒரு வேளை, நீங்கள் சொல்லும் சிகிச்சை உயிரிழப்பை ஏற்படுத்தினால் நீங்கள் அதற்கு பொறுப்பேற்பீர்களா? நீங்கள் உங்கள் பதிவில் டேக் செய்துள்ள மருத்துவரும் இதற்கு பொறுப்பை ஏற்பாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.