Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?

3 months ago 7
ARTICLE AD

சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விலை, பிப்ரவரி 1 முதல் அதீதமாக உயர உள்ளது. குறிப்பாக 4 மடங்கு உயர்ந்து ஒரு சிகரெட்டின் விலை 72 ரூபாயாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கலால் வரிச் சட்டத் திருத்தத்தின் (Excise Law Amendment) விளைவாக, சிகரெட்டின் விலை 4 மடங்கு அதிகரித்துள்ள சூழல் உருவாகியுள்ளது.

விலை உயர்வு பின்னணி

நாடாளுமன்றத்தில் அண்மையில் புகையிலைப் பொருட்களுக்குக் கூடுதல் வரி விதிப்பதற்கான சட்டத்திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. நிதி இணை அமைச்சர் பங்கஜ் செளத்ரி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதனால் சந்தையில் தற்போது சராசரியாக ரூ.18க்கு விற்கப்படும் ஒரு சிகரெட்டின் விலை, இனி ரூ.72-ஆக உயர வாய்ப்புள்ளது.

25% முதல் 100% வரை வரி உயர்வு

புகையிலைப் பொருட்களின் மீதான வரியை 25 சதவீதத்தில் இருந்து 100 சதவீதத்திற்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் தீவிர வரி உயர்வே சிகரெட் விலை தாறுமாறாக உயர்வதற்குக் காரணமாகும். இதன் மூலம் 1000 சிகரெட்டுகள் அடங்கிய பெட்டி, 200 முதல் 735 ரூபாயில் இருந்து 2700 ரூபாய் முதல் 11 ஆயிரம் வரை உயர வாய்ப்புள்ளது.

பிற பொருட்களுக்கு எப்படி?

அதேபோல புதிய மசோதாவின்படி மெல்லும் புகையிலைப் பொருட்களுக்கான 25 சதவீதம் அதிகரித்து 100 சதவீதமாக அதிகரிக்கக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஹூக்கா புகையிலைக்கான வரி 25 சதவீதத்தில் இருந்து, 33 சதவீதமாக உயர்கிறது. குட்கா பொருட்களுக்கான வரி 90 சதவீதம் ஆக உயர்கிறது.

பலவகை கலந்த சிகரெட் புகையிலைக்கான வரி 60 சதவீதத்தில் இருந்து 279 ஆக உயர்கிறது. சிகரெட்டுகளின் நீளம் மற்றும் வகைக்கு ஏற்ப, விலை உயர்வு இருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

புற்றுநோய் மற்றும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தவே

இந்தியாவில் புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் புற்றுநோய் மற்றும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் வருங்காலச் சந்ததியினரைப் புகைப்பழக்கத்தில் இருந்து மீட்பதே இதன் முதன்மை நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article