Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!

3 months ago 7
ARTICLE AD

கேரள லாட்டரி விற்பனையகம் சார்பில் கிறிஸ்துமஸ்- புத்தாண்டு பம்ப்பர் லாட்டரி விற்பனை களை கட்டி வருகிறது. இதில் முதல் பரிசாக ரூ.20 கோடி வழங்கப்பட உள்ளது.

அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என்ற நம்பிக்கை உடனும் ஏக்கத்துடனும் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை அநேகம். தினசரி லாட்டரி டிக்கெட்டுகள் தொடர்ச்சியாக விற்பனை ஆனாலும் பண்டிகைகளுக்கு என விற்கப்படும் பம்ப்பர் லாட்டரிக்கும் தனி மவுசு இருக்கிறது. இதன் விலை அதிகம் என்றாலும் பரிசுத் தொகை பல கோடிகள் என்பதால், பலரும் இதைப் போட்டி போட்டு வாங்குகின்றனர்.

அந்த வகையில் கிறிஸ்துமஸ்- புத்தாண்டு பம்ப்பர் லாட்டரி Christmas New Year Bumper Lottery 2025-26 (BR- 107)  விற்பனை களை கட்டி வருகிறது. இதில் முதல் பரிசாக ரூ.20 கோடி வழங்கப்பட உள்ளது. 2026ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி இந்த லாட்டரிக்கான குலுக்கல் நடைபெற உள்ளது.

இந்த டிக்கெட்டின் விலை ரூ.400 ஆகும். இதற்காக 90 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனைக்கு அச்சிடப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் இந்த டிக்கெட்டில் முதல் பரிசாஅக 20 கோடி ரூபாய் அளிக்கப்பட உள்ளது.

முதல் பரிசு – ரூ.20 கோடி

இரண்டாம் பரிசு – ரூ.1 கோடி (20 பேருக்கு)

மூன்றாம் பரிசு – ரூ.10 லட்சம் (20 பேருக்கு)

நான்காம் பரிசு – ரூ.3 லட்சம் (20 பேருக்கு)

ஆறுதல் பரிசு - ரூ.1 லட்சம் (9 பேருக்கு) என பரிசு மதிப்புகள் நீள்கின்றன.

இந்த லாட்டரியின் மொத்தப் பரிசு மதிப்பு ரூ.93.22 கோடி ஆகும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://statelottery.kerala.gov.in/images/pdf/prize-structure/br107.pdf  என்ற இணைப்பில் காணலாம் என்று கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.

Read Entire Article