Chennai Wonderla Theme Park: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனமான வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது.

வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா (Wonderla Theme Park)

உலகம் முழுவதும் பொழுதுபோக்கு பூங்கா என்பது மக்களின், முக்கிய தேர்வாக இருக்கிறது. குழந்தைகளுடன் பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்று, வருவதும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை புறநகர் பகுதியில், பல்வேறு பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. கோடைகாலம் மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கானோர் பொழுதுபோக்கு பூங்காவிற்கு தினமும் படையெடுத்து வருகின்றனர். வெளிநாடுகளில் பொழுதுபோக்கு பூங்கா கலாச்சாரம் தற்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் முன்னணி பொழுதுபோக்கு பூங்கா நிறுவனமாக, வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா செயல்படவில்லை என்றாலும், பெங்களூருக்கு தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான மக்கள் படையெடுக்கின்றனர்.

சென்னையில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா - Chennai Wonderla Amusement park

வொண்டர்லா நிறுவனம் தமிழ்நாட்டில் தனது முதல் பொழுதுபோக்கு பூங்காவை, சென்னை புறநகர் பகுதியில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட, பழைய மகாபலிபுரம் சாலையில், திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் என்ற பகுதியில் 65 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக, பொழுதுபோக்கு அமைத்துள்ளது. சுமார் 510 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டு இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் - India largest Roller Coaster

வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் உலகப் புகழ்பெற்ற Bolliger & Mabillard எனும் கோஸ்டர் அமைய உள்ளது. இதற்கான அனுமதி கொடுக்கப்பட்டு, அனைத்துவித பணிகளும் முடிவடைந்துள்ளன. இந்த ரோலர் கோஸ்டர் இந்தியாவில் மிகப்பெரிய ரோலர் கோஸ்டராக உருவெடுத்துள்ளது. லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் இருப்பதை போன்று, ரோலர் கோஸ்டர் சென்னையிலும் அமைய உள்ளது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

இடம்பெறும் சவாரிகள் என்னென்ன ? What are the Rides ?

சென்னையில் அமைய உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் மொத்தம் 42 சவாரிகள் இடம் பெற உள்ளன. இவற்றில் 16 சவாரிகள் நீர் சவாரிகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக தனியாக குழந்தைகளுக்கு என பிரத்தியேகமாக 10 சவாரிகள் இடம் பெற உள்ளன. மொத்தம் 52 சவாரிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மிஷன் இன்டர்செல்லர், ரோலர் போஸ்டர், வை-ஸ்கீம், ஒண்டர்லா பம்ப், பைரேட் ஷிப் உள்ளிட்ட சவாரிகள் இடம் பெற உள்ளன.

பொழுதுபோக்கு பூங்கா திறப்பு விழா எப்போது? Chennai Wonderla Theme Park Opening Date ?

சென்னை வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா டிசம்பர் மாதம் செயல்பாட்டிற்கு வரும் என தொடர்ந்து கடந்த ஒரு வருடங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்தநிலையில் தற்போது வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவின் திறப்பு விழா வருகின்ற டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி (02-12-2025) செவ்வாய்க்கிழமை திறக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் நுழைவு கட்டணம் எவ்வளவு என்பது குறித்து தகவல்களும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.