Chennai Rains: சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கொட்டிய மழை: எவ்வளவு தெரியுமா?

8 months ago 5
ARTICLE AD

சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று காலை திடீரென மழை வெளுத்து வாங்கியது. இந்த மழையானது, ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் 10 வருடங்களுக்கு பிறகு அதிக அளவு பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று சில இடங்களில் 10 செ.மீ அளவு மழை அளவு பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி 10 செ.மீ பெய்தது, சென்னையில் அதிகபட்சமாகும் என தகவல் தெரிவிக்கின்றன.

தற்போது மழை மேகங்களானது ஈசிஆர் பெல்ட்டிற்குள் நுழைகிறது எனவும், குறிப்பாக சிறுசேரி, கேளம்பாக்கம், மகாபலிபுரம், பொன்மார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் எனவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று மற்றும் நாளை வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவலை பார்ப்போம்.

The rare April storm (100 mm recorded in some places in Chennai) after 10 years is now moving into ECR belt - Siruseri, Kelambakam, Mahabalipuram, Ponmar, Tiruporur, thirukalakundram will all get intense rains. pic.twitter.com/sDzk2Ul6HL
— Tamil Nadu Weatherman (@praddy06) April 16, 2025

தமிழ்நாட்டில் ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய ( மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

17-04-2025 முதல் 22-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read: வியக்கவைக்கும் படங்கள்! விண்வெளியில் இருந்து படம் பிடிக்கப்பட்ட இந்தியா

வெப்பநிலை முன்னறிவிப்பு:

17-04-2025 முதல் 20-04-2025 வரை ஆகிய தினங்களில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Read Entire Article