<p>சென்னை – பரங்கிப்பேட்டை அருகே புயல் கரையைக் கடக்கும் என்றும் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளரும் வெதர் மேனுமான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.</p>
<p>வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது இன்று மாலை புயலாக உருமாற உள்ளது. இதற்கு ஃபெங்கல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. </p>
<p>ஃபெங்கல் புயல் சென்னை – பரங்கிப்பேட்டை அருகே கரையைக் கடக்கும் என்றும் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>
<p> </p>