Chennai Metro Train Free travel : மெட்ரோ ரயிலில் நாளை இலவச பயணம்.! யார் யாருக்கெல்லாம்.? சென்னை மெட்ரோ அசத்தல் அறிவிப்பு

1 month ago 5
ARTICLE AD

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. குறிப்பிட்ட இடத்திற்கு உரிய நேரத்தில் விரைவாக செல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. அதிலும் விமான நிலையம், ரயில் நிலையம், ஏர்போர்ட் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல பயனுள்ளதாக எனவே எனவே சென்னை நகரின் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்வது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் சென்னை ரயில் நிர்வாகம் சார்பாக கிரிக்கெட் போட்டி, இசை நிகழ்ச்சிகளுக்கு டிக்கெட் வைத்திருப்பவர்கள் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் வசதியை அறிமுகம் செய்து வருகிறது.

ஹிப் ஹாப் தமிழா இசை நிகழ்ச்சி

அந்த வகையில் நாளை நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள YMCA கல்லூரி மைதானத்தில், 07.03.2026 (சனிக்கிழமை) அன்று ஹிப் ஹாப் தமிழாவின் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் படி,  ஹிப் ஹாப் தமிழாவின் நேரடி இசை நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு மெட்ரோ இரயிலில் இலவசமாகப் பயணம் செய்ய ஸ்பான்சர் செய்கிறது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும் நிகழ்ச்சி நுழைவு சீட்டானது (தனித்துவமான QR குறியீடுகள்) மெட்ரோ பயண சீட்டாகவும் (Metro Ticket) செயல்படும். பயனாளர்கள் இந்த நுழைவு மெட்ரோ பயண சீட்டை நிகழ்ச்சி நடைபெறும் ( 07.03.2026) அன்று ஒரு சுற்று பயணத்திற்கு மட்டும் பயன்படுத்தலாம் (2 நுழைவு, 2 வெளியேறு) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் இலவச பயணம்

இந்த பிரத்யேக QR குறியீடு கொண்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி நிகழ்வு நடைபெறும் நாளான 07.03.2026 அன்று சென்னையில் செயல்படும் எந்த ஒரு மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு சென்று திரும்ப முடியும் இசை நிகழ்ச்சிக்கு வருபவர்கள் தங்கள் பயணச்சீட்டுகளில் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.

மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

நிகழ்ச்சி முடிந்து பார்வையாளர்கள் வீடு திரும்புவதற்காக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் நந்தனம் மெட்ரோ நிலையத்திலிருந்து மெட்ரோ இரயில் சேவைகளை நீட்டித்துள்ளது.

நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து விமான நிலைய மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ இரயில் நள்ளிரவு 12 மணிக்கும் புறப்படும்.

நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ இரயில் நள்ளிரவு 12 மணிக்கும்,

பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள், புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் மட்டுமே மாறி செல்லலாம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Entire Article