Chennai Electric Train : சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்.! செப்.26 TO அக்.3 வரை ரத்து செய்யப்படும் ரயில்கள் - பட்டியல் இதோ..

1 month ago 5
ARTICLE AD

சென்னையில் மின்சார ரயில் சேவை

சென்னையில் போக்குவரத்து சேவையில் முக்கிய பங்குவகிப்பது மின்சார ரயில் சேவையாகும். அந்த வகையில், தினமும் 100க்கும் மேற்பட்ட ரயில் சேவைகளின் மூலம் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்பவர்களுக்கும், பள்ளி கல்லூரிக்கு செல்பவர்களுக்கும், வெளியூரில் இருந்து எழும்பூர், தாம்பரத்திற்கு வருபவர்களும் பயன் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் மின்பாதை சீரமைக்கும் பணிக்காக ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்படுள்ளது.

சீரமைப்பு பணி- ரயில் சேவை ரத்து

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  பயணிகள் பாதுகாப்பு மற்றும் ரயில் இயக்கப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, நடைபெற்று வரும் பொறியியல் பணிகளின் ஒரு பகுதியாக சென்னை எழும்பூர்–விழுப்புரம் ரயில் பாதையில் கிண்டி ரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி, செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 4, 2026 வரை, தினமும் அதிகாலை 12.15 மணி முதல் 2.45 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களுக்கு லைன் பிளாக்/மின் பிளாக் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

செப்டம்பர் 26, 28, 29, 30 மற்றும் அக்டோபர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும் ரயில்கள்:

ரயில் எண் 40091: சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில். சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு புறப்படும் ரயில்.

ரயில் எண் 40094: தாம்பரம் – சென்னை கடற்கரை மின்சார ரயில். தாம்பரத்திலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்படும் ரயில்.

செப்டம்பர் 27-ஆம் தேதி மட்டும் ரத்து செய்யப்படும் ரயில்கள்:

ரயில் எண் 40385: சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில். சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு புறப்படும் ரயில்.

ரயில் எண் 40396: தாம்பரம் – சென்னை கடற்கரை மின்சார ரயில். தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு புறப்படும் ரயில். எனவே பயணிகள் மேற்கண்ட மாற்றங்களை கருத்தில் கொண்டு தங்களது பயணத் திட்டத்தை அமைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article