Chennai Crime: சென்னையில் பயங்கரம்.. உயிரோடு எரிக்கப்பட்ட போலீஸ் எஸ்ஐ.. சிக்கிய மனைவி.. நடந்தது என்ன?

1 month ago 2
ARTICLE AD

சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மனைவியால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தை மீறிய உறவின் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ராஜ் என்ற 58 வயது காவல் உதவி ஆய்வாளர் ராஜ் செல்வராணி என்பவரை மிக தாமதமாக திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில் ராஜ் சென்னை ஆயுதப்படை காவல்துறையில் மோட்டார் வாகன பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். செல்வராணிக்கு ராஜ் இரண்டாவது கணவராவார். முதல் கணவர் மூலம் ஒரு மகள் பிறந்த நிலையில் அவரையும் தன் குழந்தையாகவே ராஜ் வளர்த்து வந்துள்ளார்.

இவர்கள் குடும்பத்துடன் நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் இரவு திடீரென ராஜ் தங்கியிருந்த அறையில் இருந்து புகை வந்துள்ளது. செல்வராணி என்னவென்று போய் பார்த்தபோது அவரது உடல் தீயில் எரிந்ததைக் கண்டு அலறியுள்ளார். உடனடியாக அங்கு கூடிய அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கும், ஆம்புலன்ஸூக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதேசமயம் ராஜ் இருந்த அறையில் தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தான் கொலைக்கான ஆரம்ப தடயம் சிக்கியது. அதாவது அந்த அறையில் இருந்து பெட்ரோல் மணம் வீசியுள்ளது. இதுதொடர்பாக செல்வராணியிடம் கேட்டபோது ராஜ் சமீபத்தில் போக்சோ வழக்கு ஒன்றில் சிக்கியதால் மன உளைச்சலில் இருந்ததாக கூறியுள்ளார். இதனால் அவர் தற்கொலை முயற்சியை மேற்கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நகர்ந்தது. தொடர்ந்து அந்த குடியிருப்பு சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சம்பவம் நடந்த நேரத்திற்கு முன்பாக ராஜ் வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியே வேகமாக செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அவர் யார் என செல்வராணியிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்க தொடங்கினார். ராஜ் மன உளைச்சலில் இருந்ததற்காக எந்த அடையாளமும் இல்லை. செல்வராணியை அவர் மகிழ்ச்சியுடன் கடைகளுக்கும், வெளி இடங்களுக்கும் அழைத்துச் சென்றதை அக்கம் பக்கத்தினரும் உறுதி செய்தனர். இதனால் செல்வராணி மேல் போலீசாரின் சந்தேகப் பார்வை திரும்பியது.

தொடர்ந்து குழந்தைகளிடம் விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. அதன்படி சமீபகாலமாக செல்வராணிக்கும் ராஜ்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மனைவி அடிக்கடி நீண்ட நேரம் செல்போனில் பேசுவதை அவர் கண்டித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் செல்போனையும் பறித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் உடல் ரீதியான தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக இதுதொடர்ந்த நிலையில் ஆத்திரம் தாங்காமல் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தேவா என்பவரின் உதவியுடன் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளார். தூக்க மாத்திரையை உணவில் கலந்து கொடுத்து மயக்கமடைய செய்த பின்னர் தேவாவை கொண்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேவாவுக்கும், செல்வராணிக்கும் இடையே தகாத உறவு இருந்ததா என்ற கோணத்தில் போலீசார் அடித்தக்கட்ட விசார்ணையை தொடங்கியுள்ளனர். தலைமறைவாக உள்ள தேவாவை பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Read Entire Article