Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?

4 days ago 2
ARTICLE AD

Chennai Candidates TN Election 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தலைநகர் சென்னையில், விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் அதிகபட்சமாக 47 பேர் களத்தில் உள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 4,618 வேட்பாளர்கள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் போட்டியில் பிரதான மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 7 ஆயிரத்து 599 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பரிசீலனைக்குப் பிறகு 4 ஆயிரத்து 618 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 2 ஆயிரத்து 460 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 521 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. அதன் முடிவில் ஒட்டுமொத்தமாக இறுதி வாக்காளர் பட்டியலில் தற்போது 4 ஆயிரத்து 618 பேர் இடம்பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கரூரில் 85 பேரும், குறைந்தபட்சமாக அம்பாசமுத்திரத்தில் 5 பேரும் களத்தில் உள்ளனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள் களம் காண்கிறனர்.

சென்னையில் 419 வேட்பாளர்கள்..

தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் போட்டியிட 616 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 173 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதிகபட்சமாக விருகம்பாக்கம் தொகுதியில் 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 24 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக சைதாப்பேட்டையில் 6 திரும்பப் பெற்றுள்ளனர். இறுதியாக 419 பேர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, அவர்களது பெயர்கள் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதிகபட்சமாக தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூரில் 47 பேரும், குறைந்தபட்சமாக சைதாப்பேட்டை தொகுதியில் 15 பேரும் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்டார் தொகுதிகளில் எப்படி?

முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் 26 பேர் இடம்பெற்றுள்ளனர்

தவெக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதியில் 47 பேர் களத்தில் உள்ளனர்

அமைச்சர் மா. சுப்பிரமணியன் போட்டியிடும் சைதாப்பேட்டையில் 15 பேர் வேட்பாளர்களாக உள்ளனர்

அமைச்சர் சேகர்பாபு போட்டியிடும் துறைமுகம் தொகுதியில் 23 பேர் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடும் ராயபுரம் தொகுதியில் 28 பேர் போட்டியிடுகின்றனர்

சென்னை மாவட்ட வேட்பாளர்கள் விவரங்கள்

தொகுதி

போட்டியிடும் வேட்பாளர்கள்

நிராகரிக்கப்பட்ட மனுக்கள்

திரும்பப் பெறப்பட்ட மனுக்கள்

ஆர்.கே. நகர்

38

7

2

பெரம்பூர்

47

17

2

கொளத்தூர்

35

13

2

வில்லிவாக்கம்

28

4

2

திரு.வி.க. நகர்

23

10

0

எழும்பூர்

18

8

1

ராயபுரம்

28

12

2

துறைமுகம்

23

9

2

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி

26

15

0

ஆயிரம் விளக்கு

18

12

0

அண்ணா நகர்

24

15

0

விருகம்பாக்கம்

24

18

1

சைதாப்பேட்டை

15

9

6

தியாகராய நகர்

26

12

1

மயிலாப்பூர்

19

4

2

வேளச்சேரி

27

8

1

419

173

24

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட தொடங்கியுள்ளன. வரும் 23ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் பதிவாக உள்ள வாக்குகள், ஏப்ரல் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

Read Entire Article