<p>ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு முறைப்படி இன்று பொறுப்பேற்றார். தேர்தல் வாக்குறுதிகளின்படி, 5 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். குறிப்பாக, மீண்டும் அண்ணா உணவகம் அமல், நில உரிமைச்சட்டம் ரத்து உள்ளிட்ட கோப்புகளில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டார்.</p>