சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி இடம்பெறாமல் போனது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி:

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைபிரிட் மாடலில் நடைப்பெற உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பிரச்சனை மற்றும் பாதுக்காப்பு காரணங்களை காட்டி இந்திய பாகிஸ்தான் செல்லாது என்றும் அதற்கு பதிலாக துபாயில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை ஐசிசியிடம் பிசிசிஐ வைத்தது, அதற்கு ஐசிசியை செவிசாய்த்தது.

இதையும் படிங்க: ”எனக்கு PR கிடையாது” ஆனால் இது தான் எனக்கு முக்கியம்.. அஜின்கியா ரகானே நம்பிக்கை

இந்திய கொடி இல்லை:

சமீபத்தில் கடாபி மைதானத்தில் நடந்த ஒரு நிகழ்வின் போது, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் மற்ற ஏழு நாடுகளின் கொடிகள் மைதானத்தில் இருந்தது, ஆனால் இந்திய கொடி இல்லாததை பார்வையாளர்களும் ரசிகர்களும் உடனடியாகக் கவனித்தனர். இதன் வீடியோக்களும் புகைபபடங்களும் சமூக ஊடக தளங்களில் வேகமாகப் பரவி, கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் பெரிய விவாதங்களையும் சர்ச்சையும் கிளப்பியுள்ளது.

No Indian flag in Karachi: As only the Indian team faced security issues in Pakistan and refused to play Champions Trophy matches in Pakistan, the PCB removed the Indian flag from the Karachi stadium while keeping the flags of the other guest playing nations.

- Absolute Cinema,… pic.twitter.com/2zmcATn7iQ

— Nawaz 🇵🇰 (@Rnawaz31888) February 16, 2025

இந்தியாவை பழிவாங்கும் பாக்?

ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சகர்கள் என பலரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். பலர் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை ஒரு பழிவாங்கும் செயலாகக் கருதுகின்றனர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசலை பிரதிபலிக்கிறது.

இந்தியக் கொடியை விடுபட்டிருப்பது என்பது இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடமல் துபாயில் விளையாடுவதை தாக்கும் வகையில் இது இருப்பதாகவும் ரசிகர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.