CBSE 12th Result 2026: எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள்; எப்போது பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்? எப்படி காண்பது?
1 month ago 6
ARTICLE AD
பிளஸ் 2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் கடைசியிலோ மே முதல் வாரத்திலோ நிச்சயம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
2026ஆம் ஆண்டு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்றன. பிப்.17ஆம் தேதி பொதுத் தேர்வுகள் தொடங்கிய நிலையில ஏப்ரல் 10 வரையிலும் தேர்வுகள் நடைபெற்றன.  இந்தத் தேர்வை நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில் சுமார் 46 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி இருந்தனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் இறுதிக்கட்டப் பணிகளும் நடந்து முடிந்தன.
இந்த நிலையில் வெகு விரைவில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
முடிவுகளை எங்கு காணலாம்?
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் சிபிஎஸ்இ-ன் இணைய தளங்களான cbseresults.nic.in, cbse.nic.in மற்றும் results.cbse.nic.in ஆகியவற்றில் தெரிந்து கொள்ளலாம்.
5 வழிகள் என்னென்ன?
தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்தில் ஒரே சமயத்தில் பல லட்சம் பேர் இணையதளத்தைப் பயன்படுத்துவதால் சர்வர் முடங்க வாய்ப்புள்ளது. அதனால் இணையதளங்கள் தவிர்த்து வேறு 4 வழிகளிலும் தேர்வு முடிவுகளைக் காணலாம்.
டிஜி லாக்கர் (DigiLocker) செயலி,
உமாங் (UMANG) செயலி
எஸ்எம்எஸ் (SMS)
ஐவிஆர்எஸ் 24300699 (டெல்லி), 011- 24300699 (பிற பகுதிகள்)
ஆகியவற்றின் வழியாகவும் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
இணையதளத்தில் முடிவுகளை எப்படிப் பார்ப்பது?
முதலில் cbseresults.nic.in என்னும் அதிகாரப்பூர்வ சிபிஎஸ்இ இணையதளத்திற்குச் செல்லவும்.
முகப்புப் பக்கத்தில் புதிதாகத் தோன்றும் CBSE Class 12 Board Exam Results என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது திரையில் தோன்றும் புதிய பக்கத்தில், மாணவரின் தேர்வுப் பதிவு எண் (Roll Number), பள்ளியின் எண் (School Number), அட்மிட் கார்டு ஐடி (Admit Card ID) மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களைச் சரியாக உள்ளீடு செய்ய வேண்டும்.
அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பின் 'Submit' பட்டனை அழுத்தினால், உங்களுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல் திரையில் தோன்றும்.
எதிர்காலத் தேவைக்காக அந்த மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
குறுஞ்செய்தி மூலம்
கடந்த 2025ஆம் ஆண்டு 10, 12 என இரு வகுப்பு தேர்வு முடிவுகளும் மே 13ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதேபோல 2026ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 15 வெளியானது குறிப்பிடத்தக்கது.
Read Entire Article