CAT 2025: ஐஐஎம்களில் MBA கனவா? விண்ணப்பம் தொடக்கம், கடைசி தேதி, தேர்வு நாள் & முக்கிய விவரங்கள் இதோ!

4 months ago 4
ARTICLE AD

CAT 2025 Notification: ஐஐஎம் உள்ளிட்ட மேலாண்மை கல்வி நிறுவனங்களில் எம்பிஏ படிப்பதற்காக நடத்தப்படும் CAT தேர்வுக்கான அறிவிக்கையை ஐஐஎம் கோழிக்கோடு வெளியிட்டுள்ளது.

CAT தேர்வு என்பது, எம்பிஏ படிக்க நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு ஆகும். ஆண்டுதோறும் ஐஐஎம்களில் ஒன்று இந்தத் தேர்வை நடத்தும். 2025ஆம் ஆண்டுக்கான தேர்வை ஐஐஎம் கோழிக்கோடு நடத்தும் நிலையில், அதற்கான அறிவிக்கை தற்போது வெளியாகி உள்ளது.

விண்ணப்பிப்பது எப்போது?

இந்தத் தேர்வுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள தேர்வர்கள், ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 10 மணி முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கு செப்டம்பர் 13 மாலை 5 மணி கடைசித் தேதி ஆகும்.

தேர்வு எப்போது? (CAT 2025 Exam Date)

CAT 2025 தேர்வு நவம்பர் 30ஆம் தேதி, 3 அமர்வுகளாக நடைபெற உள்ளது. இதற்கான அனுமதிச் சீட்டுகள் நவம்பர் 5ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,300

மற்ற அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் ரூ.2,600

நீங்கள் எத்தனை ஐஐஎம்கள் அல்லது பங்கேற்கும் பிற கல்வி நிறுவனங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். அதற்கு, ஒரு முறை மட்டுமே கட்டணத்தைச் செலுத்தினால் போதும். அதே நேரத்தில் இந்தக் கட்டணத்தைத் திரும்பப் பெற முடியாது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

CAT இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள குறைந்தபட்ச கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். எனினும் ஒவ்வொரு ஐஐஎம்முக்கும் பிரத்யேக தேர்வு செயல்முறை உள்ளதால், அதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியம்.

தேர்வு எங்கு நடத்தப்படும்?

இந்தியாவில், சுமார் 170 நகரங்களில் கணினி மூலம் கேட் தேர்வு நடத்தப்படுகிறது.

தேர்வு முடிவுகள் எப்போது?

CAT 2025 தேர்வு முடிவுகள் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம், முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த நிறுவனங்கள் கேட் மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன?

நாடு முழுவதும் உள்ளஅனைத்து (21) ஐஐஎம்களும் இந்த மதிப்பெண்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. 100க்கும் மேற்பட்ட ஐஐஎம் அல்லாத நிறுவனங்களும் CAT மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன. iimcat.ac.in-ல் முழுப் பட்டியலையும் நீங்கள் பார்க்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.iimcal.ac.in/sites/default/files/2025-07/CAT-2025.pdf

Read Entire Article