பள்ளி, கல்லூரிகளில் சாதி வன்முறை உணர்வைத் தடுக்கும் வகையில், நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது.

நீதிபதி சந்துரு அந்த அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இயக்குநர் அறிவொளி மற்றும் உயர் அதிகாரிகளுடன் சென்று முதல்வர் ஸ்டாலினிடம் அளித்தார். அப்போது, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் உடனிருந்தார்.

இந்த அறிக்கையில், சாதி வன்முறையை ஒழிக்க உடனடியாகச் செய்ய வேண்டியவை, நீண்டகால செயல் திட்டங்கள் என இரு விதமான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நீதிபதி சந்துரு குழு பரிந்துரைகள் என்னென்ன?

* அரசுப் பள்ளிகளில் சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும்.

* சாதி ரீதியான பெயர்கள் பள்ளியில் பெயரில் இருந்தால் அதை நீக்க வேண்டும்.

* நன்கொடை வழங்குபவரின் பெயரைச் சாதிப்பெயரோடு சேர்த்துப் பதிவு செய்யக் கூடாது.

* பள்ளி பகுதியில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் கல்வி அதிகாரியாக நியமிக்கப்படக் கூடாது.

இவை உள்ளிட்ட பரிந்துரைகள் முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளன.