Cars Discontinued: செல்ஃப் எடுக்காத மாடல்கள்..2025-ல் விடைபெற்ற கார்கள் இவ்ளோ இருக்கா? காரணம் என்ன?

1 day ago 1
ARTICLE AD

Cars Discontinued 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டுடன் விற்பனை பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்திய ஆட்டோமொபைல் சந்தை:

இந்திய ஆட்டோமொபைல் சந்தை சர்வதேச அளவில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.  குறிப்பாக கார் ஆடம்பரம் என்பதை தாண்டி, நடுத்தர வாசிகள் வரையிலும் அத்தியாவசியமானதாக மாறிவிட்டது. இதனால் ஒவ்வொரு ஆண்டும்  ஏராளமான புதுப்புது கார் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு 2025ம் விதிவிலக்கல்ல. அதேநேரம், அப்படி அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து கார்களும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. இதனால் விற்பனையில் பின்தங்கி காலப்போக்கில் சந்தையில் இருந்தே நீக்கப்படுகின்றன. அந்த வகையில் நடப்பாண்டில் இந்திய சந்தையில் விற்பனை பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

2025ல் விற்பனை நிறுத்தப்பட்ட கார்கள்:

1. ஹுண்டாய் டக்சன்

ஹுண்டாய் நிறுவனத்தின் முதன்மையான கார் மாடலாக இருந்த டக்சன் கார் மாடல், அண்மையில் உள்நாட்டு சந்தையில் விற்பனை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டு, டொயோட்டாவின் ஃபார்ட்சுனருக்கு போட்டியாக சந்தைப்படுத்தப்பட்டது. ஆனால், பணத்திற்கு நிகரான மதிப்புகலை கொண்டிருந்தாலும், அதிகப்படியான விலை உள்ளிட்ட காரணங்களில் விற்பனையில் சோபிக்க முடியவில்லை. இதையடுத்து டக்சன் காரின் விற்பனை கடந்த நவம்பரில் இந்தியாவில் நிறுத்தப்பட்டது.

2. மாருதி சியாஸ்

மிட்-சைஸ் செடானான சியாஸின் உற்பத்தி மார்ச் 2025 வாக்கில் நிறுத்தப்பட்டது.  விற்பனையில் சரிவு, போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது வழக்கமான அப்டேட்கள் இல்லாதது, SUV களை நோக்கிய பொதுவான சந்தை மாற்றம் ஆகியவற்றால் இந்த காரானது விற்பனை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதன் விலை கடைசியாக ரூ.9.40 லட்சத்திலிருந்து ரூ.12.29 லட்சம் வரை நீண்டது.

3. மெர்சிடிஸ் பென்ஸ் GLB

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLB கார் மாடலின் விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்துடன் நிறுத்தப்பட்டது. 2022 ஆம் ஆண்டு மலிவு விலையில் 7 இருக்கைகள் கொண்ட சொகுசு SUV ஆக அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, அதன் இரண்டு ஆண்டு குறுகிய விற்பனைக் காலம் முடிவுக்குக் வந்தது. குறைந்த விற்பனை மற்றும் அதிக விலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சர்வதேச சந்தைக்கு ஒரு புதிய தலைமுறை GLB எதிர்பார்க்கப்படுகிறது.

4. கியா காரென்ஸ்

கியா நிறுவனம் இந்த ஆண்டில் காரென்ஸ் க்ளாவிஸ் என்ற மேம்படுத்தப்பட்ட கார் மாடலை சந்தைப்படுத்தியது. இதையடுத்த்து, முந்தைய காரென்ஸ் கார் மாடலில் இருந்த 10 வேரியண்ட்களில் ஒன்பதை விற்பனை பட்டியலில் இருந்து நீக்கியது. தற்போது  Premium (O) வேரியண்ட் மட்டுமே நேட்சுரலி ஆஸ்பிரேட் மற்றும் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் என மூன்று வகையான இன்ஜின் ஆப்ஷன்களிலும் விற்பனையில் உள்ளது.

மேலும் கியா நிறுவனத்தின் சோனெட், செல்டோஸ் கார் மாடல்களில் இருந்து, இண்டெலிஜெண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கொண்ட வேரியண்ட்களின் விற்பனையும் நிறுத்தப்பட்டது.

5. ஹோண்டா அமேஸ்

இரண்டாம் தலைமுறை ஹோண்டா அமேஸின் VX வேரியண்டின் உற்பத்தியை நடப்பாண்டின் மத்தியில் ஹோண்டா நிறுத்தியது. கடந்த டிசம்பர் 2024 இல் வெளியிடப்பட்ட மூன்றாம் தலைமுறை ஹோண்டா அமேஸின் அறிமுகத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

6. வால்வோ S90

வால்வோ S90 மிட்-சைஸ் சொகுசு செடான் இந்தியாவில் ஜுன் மாதத்தில் விற்பனை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.  உள்ளூரில் அசெம்பிள் செய்யப்பட்ட இந்த காரின் விலை ரூ.68.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருந்தது.

இவைபோக புதிய தலைமுறை மாடலை அறிமுகப்படுத்துவதற்காக ஸ்கோடாவின் முந்தைய தலைமுறை கோடாக்கின் விற்பனை நிறுத்தப்பட்டது.

மந்தமான விற்பனை, அதிகப்படியான விலை ஆகியவை ஒருபுறமிருக்க,  விரைவில் அமலுக்கு வரவுள்ள புதிய உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப இந்த கார்களை மேம்படுத்துவது அதிக செலவிற்கு வழிவகுக்கலாம். இதுவும் மேற்குறிப்பிடப்பட்ட கார் மாடல்களை விற்பனயில் இருந்து நீக்கியதற்கு காரணமாகும்.

Read Entire Article