Cardamom: 6 ஆண்டுகளுக்கு பிறகு கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாயை கடந்த ஏலக்காய்..!

11 months ago 7
ARTICLE AD

கேரளாவில் அதிக அளவில் விவசாயம் செய்யப்படும் ஏலக்காய், நறுமண பொருட்களில் ஒன்றாகும். கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் சுமார் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இந்த ஏலக்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விவசாயத்தில் பெரும்பாலும் தமிழக தோட்ட தொழிலாளர்களை ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கிலோ வரை ஏலக்காய் வர்த்தகம் என்பது நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..

இந்த விற்பனையானது கேரள மாநிலம் புத்தடி மற்றும் தேனி மாவட்டம் போடியில் உள்ள நறுமணப் பொருள் வாரியத்தில் ஆன்லைன் மூலம் ஏல முறையில் விற்பனை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இரு முறை ஆன்லைன் மூலம் ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தில் போடி, தேவாரம், கோம்பை, கம்பம், குமுளி கட்டப்பனை மற்றும் தமிழகத்தின் இதர வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலக்காய்களை கொள்முதல் செய்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடி பகுதி மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது.

உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!

அதுமட்டுமல்லாமல் கேரள மாநிலம் இடுக்கி உள்ளிட்ட ஹை ரேஞ்ச் பகுதிகளில் காப்பி, ரப்பர், மிளகு, தேயிலை போன்ற விவசாயமும் அதிக அளவில் செய்யப்படுகிறது. இங்கே விளைவிக்கப்படும் ஏலக்காய், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. 2025 புத்தாண்டில் முதல் நாள் முதல் தற்போது வரையில்  நடைபெறும் ஏலத்தில் முதல் தர ஏலக்காய் ரூபாய் 4000 வரை ஏலம் போனது.  சராசரி விலை ரூபாய் 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

கடந்த ஆறு வருடங்களுக்குப் பின்பு இந்த விலை கிடைத்துள்ளது. கடந்த வருடங்களில் ரூபாய் 2000 வரை மட்டுமே விலை போனது.  இதற்கு முன்பு 2019ல் புத்தடி ஸ்பைசஸ் பார்க்கில் நடந்த இ-ஏலத்தில் ரூபாய் 7000 வரை விலை போய் ரெக்கார்டு படைத்தது. இதனால் ஹை ரேஞ்ச் விவசாயிகள் ஏலக்காய் பயிரிடுவதில் அதிகப்படுத்தினர். தற்போது 37 ஆயிரத்து 116 ஏலத்திற்கு வந்த ஏலக்காய் 36 ஆயிரத்து 975 கிலோ விற்பனையாகி விட்டது.

TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?

ஆனாலும் சிறு, குறு ஏலக்காய் விவசாயிகள் மகிழ்ச்சியில் இல்லை, காரணம் கடந்த ஆண்டு வறட்சியில் 70% ஏலத் தோட்டங்களும் அழிந்து இருந்தது. இதனால் சிறு விவசாயிகள் புதியதாக ஏலம் பயிரிட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். விலை உயர்வினால் எங்களுக்கு பயனில்லை. கடந்த ஆண்டு வறட்சியின் கடுமையான மழை இன்மையாலும் கால அவஸ்தை மாறி மாறி எங்களுக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது உயர் ரக ஏலக்காய் ரூபாய் 4000 வரை போய் உள்ளது இருப்பினும் சராசரி ரகம் ரூபாய் 4000 க்கு மேல் போனால் தான் எங்களுக்கு மிகவும் பயனாக இருக்கும் என்று ஹைரேஞ்ச் விவசாயிகள் கூறுகின்றனர்.

Read Entire Article