Budget CNG Cars: ரூ.4.62 லட்சம் தான்..! 34.4 KM மைலேஜ் - எரிபொருள் செலவை குறைக்கும், டாப் 5 பட்ஜெட் சிஎன்ஜி கார்கள்

1 week ago 3
ARTICLE AD

Budget CNG Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எரிபொருள் செலவை குறைக்கும் வகையில், மலிவு விலையில் கிடைக்கும் டாப் 5 சிஎன்ஜி கார் மாடல்களின் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

பட்ஜெட் & மைலேஜ் சிஎன்ஜி கார்கள்:

அமெரிக்கா - ஈரான் போரால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கலால் வரியை குறைத்ததான் மூலம், தற்காலிகமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வதை மத்திய அரசு கட்டுப்படுத்தியுள்ளது. நீண்ட கால வருவாய் இழப்பை சமாளிக்க முடியாது என்பதால், ஐந்து மாநில தேர்தல் முடிந்ததும் எரிபொருள் விலை உயர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறடு. இந்நிலையில் பலரும் மாற்று எரிபொருள் ஆப்ஷனை தேர்வு செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் எளிய அணுகல் விலையை காரை சொந்தமாக்குவதோடு, தினசரி எரிபொருள் செலவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும், டாப் 5 பட்ஜெட் சிஎன்ஜி கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

டாப் 5 சிஎன்ஜி கார்கள்

மாருதி சுசூகி செலேரியோ, மாருதி சுசூகி வேகன் ஆர், மாருதி சுசூகி ஆல்டோ கே10, மாருதி சுசூகி டிசையர் மற்றும் மாருதி சுசூகி எஸ்-ப்ரெஸ்ஸோ என அனைத்து, பட்ஜெட் சிஎன்ஜி கார் மாடல்களும் மாருதி நிறுவனத்தையே சேர்ந்தவையாக உள்ளன.

மாடல்

எக்ஸ் - ஷோரூம் விலை

ARAI மைலேஜ் (Km/Kg)

முக்கிய அம்சங்கள்

மாருதி சுசூகி எஸ்-ப்ரெஸ்ஸோ

ரூ.4.62 - ரூ.5.92 லட்சம்

32.73 கிலோ மீட்டர்

அதிகப்படியான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் உடன் காம்பேக்ட் க்ராஸ் ஓவர் ஸ்டைலிங்

மாருதி சுசூகி ஆல்டோ கே10

ரூ.4.82 - ரூ.5.32 லட்சம்

33.85 கிலோ மீட்டர்

தொழிற்சாலையிலேயே சிஎன்ஜி வசதி பொருத்தப்பட்டு மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் கார்

மாருதி சுசூகி வேகன் ஆர்

ரூ.5.89 - ரூ.6.45 லட்சம்

34.05 கிலோ மீட்டர்

அதிகப்படியான ஹெட்ரூம் உடன் கூடிய நடைமுறைக்கு உகந்த டால் பாய் டிசைனை கொண்டுள்ளது

மாருதி சுசூகி செலேரியோ

ரூ.5.97 லட்சம்

34.43 கிலோ மீட்டர்

இந்தியாவிலேயே அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜி கார். நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிகவும் உயர்ந்தது

மாருதி சுசூகி டிசையர்

ரூ.8.03 0 ரூ.8.74 லட்சம்

33.73 கிலோ மீட்டர்

செடான் பிரிவில் அதிக மைலேஜ் தரக்கூடிய சிஎன்ஜி மாடலாக திகழ்கிறது

உள்நாட்டு சந்தையில் 10 லட்சம் பட்ஜெட்டிற்குள் இன்னும் பல சிஎன்ஜி கார் மாடல்கள் கிடைத்தாலும், முதல் முறையாக கார் வாங்குபவர்கள், மலிவு விலையில் கார் வாங்க நினைப்பவர்கள், மைலேஜிற்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பவர்கள் மேற்குறிப்பிடப்பட்ட 5 கார் மாடல்களை பரிசீலிக்கலாம்.

மைலேஜ் கிங் - செலேரியோ சிஎன்ஜி

காம்பேக்ட் 5 சீட்டர் ஹேட்ச்பேக்கான செலேரியோ, இந்த பிரிவில் சிஎன்ஜி எடிஷனில் அதிக மைலேஜ் தரக்கூடியதாக உள்ளது. நகர்புற தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும், நடைமுறைக்கு உகந்ததாகவும் உள்ளது. செலேரியோவின் சிஎன்ஜி எடிஷன் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிஎன்ஜி டேங்க உள்ளது. இதனை முழுமையாக நிரப்பினால் 2 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமாக இடைநிற்றல் இன்றி பயணிக்கலாம்.

பாதுகாப்பிற்காக 6 ஏர் பேக்குகள், EBD உடன் கூடிய ABS மற்றும் ரிவர்ஸ் பார்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. சொகுசு பயணத்திற்கான முன் மற்றும் பின் என இரண்டுபுறங்களிலும் பவர் விண்டோக்கள், பவர் ஸ்டியரிங் ஹீட்டருடன் கூடிய ஏசி வசதி இணைக்கப்பட்டுள்ளது.

Read Entire Article