ஓவியத்தின் இரண்டு புறமும் நிற்கும் இரு எலிகளுக்கு இடையில் 3 வித்தியாசங்கள் உள்ளன. அதைக் கண்டுபிடிக்க முடிகிறதா? பார்க்கலாம்.

நுகர்வை மட்டுமே மனிதர்களின் புதிய இயல்பாக மாற்றி விட்ட செல்போன், காட்சி ஊடகங்களுக்கு மத்தியில், நம் மூளையைச் சற்றே யோசிக்க வைத்து, வேலை கொடுக்க வேண்டியதும் அவசியமாக மாறிவிட்டது. இந்த நேரத்தில் 6 வித்தியாசங்களைக் கண்டுபிடிப்பது, படப் புதிர்கள், புகைப்படங்களில் ஒளிந்திருக்கும் பொருட்கள் என நம் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக செலவழிக்கலாம். இதனால் சோம்பிக் கிடக்கும் மனதை புத்துணர்ச்சி மிக்கதாக மாற்ற முயற்சிக்கலாம்.

இதோ இந்த ஓவியத்தைப் பாருங்கள்.

ஓவியத்தில் ஜெர்ரி எலி ஒன்று குதூகலமாக, கையை விரித்தபடியே நிற்கிறது. இரண்டு பக்கமும் நிற்கும் இரு எலிகளுக்கும் இடையில் 3 வித்தியாசங்கள் உள்ளன. அதை அரை நிமிடத்துக்குள் அதாவது 30 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.

என்ன கண்டுபிடிக்க முடிந்ததா?

இதோ.. நேரம் முடியப் போகிறது..

முடிந்தே விட்டது..

எத்தனை பேர் வித்தியாசங்களை சரியாகக் கண்டுபிடித்தீர்கள்?

முடியாதவர்கள் கீழே பாருங்கள்.

எலியின் தலைமுடி

எலியின் புருவம்

வால்

Credit: Reddit

மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த புதிர் சிறிது நேரம் உங்களை சுவாரசியமாக்கி, மூளைக்குப் புத்துணர்ச்சி அளித்திருக்கும் என்று நம்புகிறோம்..!

- அடுத்தடுத்த அத்தியாயங்களில் புதிர் முடிச்சுகளை தொடர்ந்து அவிழ்க்கலாம்!

இதையும் வாசிக்கலாம்: Optical Illusion: ஓவியத்தில் மறைந்திருக்கும் பென்சில்; 10 நொடிதான் டைம்- கண்டுபிடிக்க முடியுமா?