டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் பல ஆண்டுகள் நிலுவையில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் 'அந்தகன்'. தியாகராஜன் இயக்கத்தில் சிம்ரன், சமுத்திரக்கனி, ஊர்வசி, கார்த்திக், யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான திரைபிரபலங்கள் நடித்திருந்த இப்படம் முதல் நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதுடன் பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

இந்நிலையில் எந்த ஒரு படமாக இருந்தாலும் அதிரடியாக விமர்சனம் சொல்லி சர்ச்சையை ஏற்படுத்துபவர் ப்ளூ சட்டை மாறன். அவர் என்ன விமர்சனம் சொல்ல போகிறார் என்பது நெட்டிசன்களால் உற்று நோக்கப்படும். படம் நன்றாகவே இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு குறையை கண்டுபிடித்து விமர்சனம் செய்வார். ஒரு சில சமயங்களில் அது பெரிய பிரச்சினையாக கூட வெடித்துள்ளது. அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் 'அந்தகன்' படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனம் கூறியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

'அந்தகன்' படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் அளித்த விமர்சனத்தில் இந்தி படத்தை அப்படியே காப்பி அடித்து ரீ மேக் செய்யாமல் எடிட் செய்தது பாராட்டிற்குரியது. தேவையற்ற காட்சிகளை நீக்கியது முதல் பாகத்தை விறுவிறுப்பாக நகர்த்தி இருந்தது. ஆனால் இரண்டாம் பாகம் அப்படியே இந்தி படத்தில் இருந்தது போலவே அமைத்துள்ளனர். பொதுவாக ரீ மேக் படம் என்ற பெயரில் ஒரிஜினல் படத்தை முடிந்த அளவுக்கு டேமேஜ் செய்து விடுவார்கள். ஆனால் அந்தகன் படத்தை அப்படி செய்யாமல் மிகவும் நேர்த்தியாக இயக்கி வெற்றி பெற்று விட்டார் தியாகராஜன் என தன்னுடைய விமர்சனத்தில் தெரிவித்து இருந்தார் ப்ளூ சட்டை மாறன்.

மக்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகிறது அந்தகன்.

வசூல் ரீதியிலான வெற்றியை எந்தளவிற்கு பெறும் என்பது சில தினங்கள் கழித்து தெரியும்.

சமீபத்தில் வெளியான இந்தியன் 2, ராயன் போன்ற படங்களை விட இது எவ்வளவோ மேல்.

Prashanth is back! pic.twitter.com/1GXazZTQlw

— Blue Sattai Maran (@tamiltalkies) August 10, 2024

மேலும் தற்போது தன்னுடைய எக்ஸ் தள பக்க மூலம் புதிய போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அந்தகன் படம் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் அளவில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பது இன்னும் சில தினங்களில் தெரிய வரும். சமீபத்தில் வெளியான இந்தியன் 2, ராயன் உள்ளிட்ட படங்களை விட இப்படம் எவ்வளவோ மேல் என தெரிவித்துள்ளார்.