BJP Seats Kanyakumari: கன்னியாகுமரியில் தாமரை மலருமா? - 5 தொகுதிகளில் போட்டி.. விட்டுக்கொடுத்த அதிமுக - காரணம் என்ன?

2 weeks ago 2
ARTICLE AD

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 5 தொகுதிகளில் தாமரை போட்டியிடுகிறது. ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகளின் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். பாஜக, பாமக, அமமுக, அதிமுக, தமாகா, புரட்சி பாரதம், ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் எங்கெங்கு போட்டியிடுகின்றன விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில், பாஜக போட்டியிடும் தொகுதிகள்தான் தற்போது அரசியலில் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றன.

பாஜக போட்டியிடும் தொகுதிகள்.?

1.மயிலாப்பூர்
2. தளி
3. மொடக்குறிச்சி
4. அவினாசி
5. உதகமண்டலம்
6. கோவை வடக்கு
7. மதுரை தெற்கு
8. ராதாபுரம்
9. விளவங்கோடு
10. திருவண்ணாமலை
11. அறந்தாங்கி
12. நாகர்கோவில்
13. குளச்சல்
14. மானாமதுரை
15. பத்மநாபபுரம்
16. ராசிபுரம் தனி
17. திருப்பூர் தெற்கு
18. சாத்தூர்
19. புதுக்கோட்டை
20. திருச்செந்தூர்
21. கந்தர்வக்கோட்டை
22. திருப்பத்தூர்
23. வாசுதேவநல்லூர்
24. ஆவடி
25. தஞ்சாவூர்
26. திருவாரூர்
27. ராமாநாதபுரம்

கன்னியாகுமரியில் 5 தொகுதிகளில் தாமரை போட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 5 தொகுதிகளில் தாமரை போட்டியிடுகிறது. நாகர்கோவில், விளவங்கோடு, குளச்சல், பத்மநாபபுரம், தொகுதிகளில் பாஜகவும், கிள்ளியூரில் தமிழ் மாநில காங்கிரஸ் தாமரை சின்னத்திலும் போட்டியிடுகிறது. அந்த மாவட்டத்தில் ஒரே தொகுதியில் மட்டும் அதிமுக போட்டியிடுகிறது. அங்கு தளவாய் சுந்தரம் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னியாகுமரியில் டெபாசிட் இழந்த அதிமுக

2024 மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது. அந்த தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்த 7 தொகுதிகளில் கன்னியாகுமரியும் ஒன்று. இதன் காரணமாகவே அந்த தொகுதிகளை பாஜகவுக்கு அதிமுக விட்டுகொடுத்துள்ளதாக தெரிகிறது. கன்னியாகுமரி தொகுதியில் தேசிய அரசியல் கண்ணோத்துடன் மக்கள் வாக்களிப்பார்கள் என்பதால், அங்கு பாஜவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் காந்தி வெற்றி பெற்றார். இம்முறை அவருக்கே போட்டியிட வாய்ப்பு கொடுக்குப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

Read Entire Article